ஆடி வெள்ளியில் அம்பாளுக்குப் படைக்க வேண்டிய நிவேதனம்!

அம்மன் வழிபாட்டுக்குச் சிறந்த மாதம் ஆடி மாதம். அன்னைக்கு உகந்த ஆடிச்செவ்வாய்,
ஆடி வெள்ளியில் அம்பாளுக்குப் படைக்க வேண்டிய நிவேதனம்!

அம்மன் வழிபாட்டுக்குச் சிறந்த மாதம் ஆடி மாதம். அன்னைக்கு உகந்த ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பதினெட்டு, ஆடி அமாவாசை பௌர்ணமி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆடி வெள்ளியன்று அன்னைக்கு நைவேத்யமாக என்ன படைக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு தவிட்டு அப்பம் செய்து நைவேத்யம் செய்வது வழக்கம். தவிட்டை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதைச் சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க வேண்டும். தீக்கனல் இல்லாவிட்டால், தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம்.

ஆடிவெள்ளியன்று காலையில் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, அன்னைக்குப் படைத்த இந்தப் பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். கேரளாவில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது. அங்கு இந்த அப்பத்தை "கனகப்பொடி' என்கின்றனர். 

தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் "பி' உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்தச் சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யமாகப் படைத்து, அம்பாளின் அருள் கடாட்சத்தை பூரணமாகப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com