குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் விமரிசையாகத் தொடங்கிய ஆடிப்பெருந்திருவிழா

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் ஆடிப்பெருந்திருவிழா இன்று விமரிசையாக தொடங்கியுள்ளது. 
குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் விமரிசையாகத் தொடங்கிய ஆடிப்பெருந்திருவிழா

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் ஆடிப்பெருந்திருவிழா இன்று விமரிசையாக தொடங்கியுள்ளது. 

நவகிரகங்களில் மிகமுக்கியமானவர் சனீஸ்வர பகவான். ஈஸ்வர பட்டம் பெற்றவர். சனி தோஷம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டினால் அனைத்துவித தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. 

இக்கோயிலில் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 18-ம் தேதி வரை ஆடிப்பெருந்திருவிழா நடைபெற உள்ளது. வரும், 21.7.2018 - அன்று கலிப்பணம் கழித்து, சுத்தநீர் தெளித்தல், கொடியேற்றம், இரவு சிறப்பு பூஜை நடைபெறும்.

28.7.2018 - அன்று சிறப்பு பூஜையும்; 03.08.2018 அன்று பகல் 12.30 மணியளவில் திருக்கல்யாணமும்; 4.8.2018 - சக்தி கரகம் எடுத்தல்; இரவு 12.00 மணிக்கு மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல்; 05.08.2018 - சிறப்பு பூஜை, இரவு சுவாமி புறப்பாடு, வீதிவுலா நடைபெற உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com