தீராத வியாதிகளால் அவதிப்படுகின்றீர்களா? சிவன்மலை முருகனை வந்து ஒருமுறை தரிசியுங்கள்!!

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் சற்று வித்தியாசமானது சிவன்மலை கோயில்.
தீராத வியாதிகளால் அவதிப்படுகின்றீர்களா? சிவன்மலை முருகனை வந்து ஒருமுறை தரிசியுங்கள்!!

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் சற்று வித்தியாசமானது சிவன்மலை கோயில். இவர் திடீரென ஒரு பக்தர் கனவில் தோன்றி ஏதாவது ஒரு பொருளை காண்பித்து அதை வைத்து பூஜை செய்ய சொல்வார். ஆனால், பக்தர்கள் சொல்வதை கோயில் நிர்வாகம் உடனே ஏற்பதில்லை. அவர் சொல்வது உண்மையா என்று பூ போட்டுப் பார்த்த பிறகே அவர் சொல்லும் பொருளை பூஜை செய்ய ஒத்துக் கொள்கின்றனர்.

புராண வரலாறு:

தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள். இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர புதல்வர்களால் பூலோக மக்களுக்கு மிக பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் சிவபெருமானிடம் முனிவர்களும், பக்தர்களும் முறையிட்டார்கள். அசுரர்களின் உலோகத்தலான கோட்டைகளை அழிக்க சிவபெருமான் பிரமாண்ட தேர் உருவாக்கி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு போரிடும் போது, வில்லாக இருந்து மேருமலையின் ஒரு பாகம் பூமியில் விழுந்தது. அதுவே சிவன்மலை என்று அழைக்கப்படுகிறது.

அகத்திய முனிவர், மெய்யான சன்மார்க்க நெறியை உபதேசிக்கும்படி முருகப் பெருமானிடம் வேண்டினார். அகத்தியரை சிவன்மலைக்கு அழைத்துச் சென்று இங்கு இருந்த அத்திமரத்தின் கீழ் உபதேசம் செய்து அந்த இடத்திலேயே நிரந்தரமாக அமர்ந்தார் முருகப் பெருமான்.

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கெளதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். அவரும் "சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்' என்றார். கெளதமகரிஷி கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்ததும் அவனை வதைத்த நோய் விலகியது.

வள்ளியாத்தாள் என்ற பெண்ணின் மகன் விசுவநாதன் வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டான். அப்பெண், சிவன்மலை முருகனை பற்றி அறிந்து தன் மகனை அழைத்துக் கொண்டு திருக்கோயிலுக்கு சென்று முருகனை வணங்கினாள். இதன் பலன்கள் சில மாதங்களிலேயே தெரிந்தது. விசுவநாதனின் வெண்குஷ்டம் நோய் நீங்கியது. தீராத வியாதிகளையும் தீர்த்து வைப்பார் சிவன்மலை குமரப்பெருமான்.

கரூரிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் காங்கேயத்தில் இறங்கி அங்கிருந்து சிவன்மலை கோயிலை அடையலாம்.

 - அறந்தாங்கி சங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com