திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் புஷ்பாஞ்சலி

திருக்கழுகுன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயிலில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சகஸ்ர கலாசாபிஷேகம், புஷ்பாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் புஷ்பாஞ்சலி

திருக்கழுகுன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயிலில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சகஸ்ர கலாசாபிஷேகம், புஷ்பாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
 இக்கோயிலில் ஆண்டு தோறும் சகஸ்ர கலசாபிஷேகம், லலிதா சகஸ்ரநாம பராயணத்துடன் புஷ்பாஞ்சலி, வீணை கச்சேரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையொட்டி 1,008 கலசங்கள் வைக்கப்பட்டு, சகஸ்ர கலச பூஜைகள் நடைபெற்றன. பின்னர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீ சக்கரம் பதித்த பட்டுப்புடவை சாற்றப்பட்டு, முத்து பவளம், சொர்ணம், வெள்ளி, நவரத்தினங்களால் கங்கை நீரால் நிரப்பப்பட்ட கலசத்தினால், சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. மாலை உலக நன்மை வேண்டி ஸ்ரீ தேவி பாகவதமும், செüந்தர்யலகரியும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மலர்களைக் கொண்டு லலிதா சகஸ்ர நாம பாராயணத்துடனும், 108 வீணை இசையுடனும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. சனிக்கிழமை அதிகாலை வரை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
 விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் குமரன், தக்கார் நற்சோணை, வேதமலை வலபெருவிழா குழுவினர் தலைவர் தி.கா.துரை, செயலாளர் தி.து.அன்புச்செழியன், நிர்வாகிகள் பாஸ்கர், விஜயகுமார், ஏழுமலை, குமார், வேதகிரி, மோகன், ஜெகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com