புட்லூர் பூங்காவனத்தம்மன் கோயிலில் "இருட்டுக் கும்பம்' திருவிழா

திருவள்ளூர் அருகே பூங்காவனத்தம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு "இருட்டுக் கும்பம்' நிகழ்ச்சியில் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புட்லூர் பூங்காவனத்தம்மன் கோயிலில் "இருட்டுக் கும்பம்' திருவிழா

திருவள்ளூர் அருகே பூங்காவனத்தம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு "இருட்டுக் கும்பம்' நிகழ்ச்சியில் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 திருவள்ளூர் அருகே புட்லூரில் அருள்மிகு பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்கு மூலவராக அங்காளபரமேஸ்வரி அம்மனும், தனித் தனி சந்நிதிகளில் விநாயகர், தாண்டவராயன் சுவாமி ஆகியோர் திகழ்கிறார்கள்.
 இக்கோயிலின் தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தும் வகையில் கூழ் ஊற்றுதல், கிடா வெட்டி அம்மனுக்கு படையல் இடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
 அதேபோல், இந்த ஆண்டு ஆடிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பக்தர்கள் அளிக்கும் கிடா, கோழி, கருவாடு, மீன் உள்ளிட்டவைகளை சமைத்து பெரிய தட்டில் வைத்து அம்மனுக்கு படையலிடும் "இருட்டுக் கும்பம்' நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது, இரண்டு நிமிடம் வரையில் விளக்கை அணைத்து மீண்டும் எரியவிடுவர்.
 இதைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்குவது வழக்கம்.
 இக்கோயிலில் வழிபாடு செய்தால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம் ஆகும்.
 அதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் நாள்தோறும் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
 அதேபோல், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். ஆடிவிழாவைக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் எலுமிச்சம் பழம், பூ, பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன.
 இந்த ஆடித் திருவிழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பூசாரி ஜீவானந்தம் பிரசாதம் வழங்கினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com