வாகனங்களைப் பாதுகாக்கும் நாகமுத்து மாரியம்மன்

புதுவை நைனார்மண்டபத்தில் கடலூர் சாலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய புற்றில் உருவானது நாகமுத்து மாரியம்மன் கோயில். 
வாகனங்களைப் பாதுகாக்கும் நாகமுத்து மாரியம்மன்

புதுவை நைனார்மண்டபத்தில் கடலூர் சாலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய புற்றில் உருவானது நாகமுத்து மாரியம்மன் கோயில். 

இந்தக் கோயிலின் சிறப்பம்சம் என்னவெனில் இந்தக் கோயிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை பணம் செலுத்தி விட்டு வாகனங்களை எடுத்துச் சென்றால் எந்த விபத்தும் நேரிடாது என்பது ஐதீகமாக உள்ளது. 

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை செடல் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே காப்பு கட்டிக்கொண்டு பயபக்தியுடன் பஸ், லாரி, வேன், கார், டிராக்டர், ஜே.சி.பி எந்திரம் உள்ளிட்ட வாகனங்களை அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கி வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். 

இந்தக் கோயில் விரிவாக்கத்துக்காக கோயில் அருகே உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனம் தங்களது சொந்தமான இடத்தை ஒதுக்கி தந்தது குறிப்பிடத்தக்கதாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com