இறைவனுக்கு நாம் செய்யும் ஜபம் பல்லாயிர மடங்கு சக்திகள் பெருக்கும் கிரகண காலம்! 

வானவியல் சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் (Astro Physics) பெரிதும் அறிவு சார்ந்தவர்கள். செவ்வாய்க்கிரகம்..
இறைவனுக்கு நாம் செய்யும் ஜபம் பல்லாயிர மடங்கு சக்திகள் பெருக்கும் கிரகண காலம்! 

வானவியல் சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் (Astro Physics) பெரிதும் அறிவு சார்ந்தவர்கள். செவ்வாய்க்கிரகம் சிவப்பு என்ற அறிவியல் ஆய்விற்குப்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய்க்கு சிவப்பு வண்ணத்தில் ஆடை அணிவித்தவர்கள் நாம். அது போலத்தான் மற்ற கிரகங்களுக்கு இது பொருந்தும்.

இன்றைய காலத்தில் அறிவியல் கருவிகள் ஆயிரத்தின் துணைகொண்டு சொல்வதை, இருந்த இடத்தில் இருந்தே சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள் இந்தியர்கள். அதுபோலத் தான் கிரகணங்களும். ஜோதிட சாஸ்திரப்படி ராகுவும், சந்திரனும் ஒரே நட்சத்திரக் காலில் சந்திக்கும் போது (அதே போல சூரியனும், கேதுவும் ஒரே நட்சத்திரக் காலில் சந்திப்பார்கள்) அப்போது சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. பௌர்ணமியில் சந்தித்தால் சந்திர கிரகணம், அமாவாசையில் சந்தித்தால் சூரிய கிரகணம் ஆகும். 

புராண சாஸ்திரத்தின்படி அமுதம் உண்ண அமர்ந்த தேவர்கள் வரிசையில் சந்திர, சூரியனுக்கு நடுவே ஓர் அசுரன் அமர்ந்தான். அமுதம் பரிமாறும் பகவானிடம் இருவரும் அதனைத் தெரிவிக்கவே, அவரும் தனது அமுதக் கரண்டியாலேயே அசுரனின் தலையைத் துண்டிக்க, அமுதம் பட்டதாலேயே சாகா வரம் அமைய, அவர்களே ராகு, கேது என இரு கோள்களாக ஆனார்கள்.

ராகுவிற்கு ஒருநாளில் 1 1/2  மணி நேரமும் (ராகு காலம்) கேதுவிற்கு ஒரு நாளில் 1 1/2 மணி நேரமும் (எமகண்டம்) கொடுத்து இருவருக்குமாக வாரத்தில் 21 மணி நேரம் வழங்கினார் இறைவன் என்பது வரலாறு. அதன் காரணமாகக் கோபம் கொண்ட ராகுவும், கேதுவும் (பாம்பு வடிவம்) ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இருவரையும் விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகின்றது என்பது புராணம். 

அறிவியல் முறைப்படி பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது என்கின்றனர். புரிதலுக்காகக் கூட நம் முன்னோர்கள் புராணத்தின் செய்தி வாயிலாக நமக்கு ராகு, கேது விழுங்குதல் செய்தியினைத் தந்திருக்கின்றார்கள். பஞ்சாங்க கணிப்பில் துல்லியமாக இத்தனை மணிக்குத் தொடங்கி, இத்தனை மணியில் நிறைவடைகின்றது என அறிவின் மூலமாகவே கணக்கிட்டுச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள் எனும் போது தலை வணங்குகின்றோம். 

கிரகண காலத்தில் புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும். எனவே அந்த நேரத்தில் உணவு உண்ணக்கூடாது என நமது பெரியவர்கள் சொல்லிவைத்தார்கள். காரணம் இந்த நேரத்தில் செரிமான சக்தி மிகவும் குறைவாக இருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதாலேயே கிரகண காலத்தில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உண்ண வேண்டும் என்று கூறியுள்ளனர். 

மேலும் அந்த ரேத்தில் நமது வீட்டிலுள்ள உணவுப் பொருட்களில் தர்ப்பைப் புல்லினைப் போட்டு வைக்க வேண்டும் எனக் கூறுவோம். காரணம் தர்ப்பைப் புல் ஒரு மின்கடத்தி (Electricity Conductor) ஆகும். அது வானவெளியில் உள்ள அசுத்தக் கதிர்களை உணவுப்பொருட்களில் புகவிடாமல் தடுக்கின்றது. 

கிரகண காலத்தில் நம் இல்லத்திலும், ஆற்றங்கரையிலும் நீர்நிலைகளிலும் ஜபம் செய்வது சிறப்பானதாகும். காரணம் கிரகண காலத்தில் செய்யும் ஜபம் பல்லாயிரக் கணக்கான மடங்கு பலன் தருவதாகக் கூறப்படுகிறது. முன்னர் கழுத்தளவு நீரில் நின்று ஜபிப்பவர்களும் உண்டு. இப்போதும் கூட தொட்டிநீர்களில் நின்று ஜபிப்பவர்கள் உண்டு. எனவே, இந்த நேரத்தில் குளித்து, ஜபம் செய்வது, இறைவன் நாமங்களைச் சொல்வது, பஜனைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் பாடுவது போன்ற பயனுள்ள விஷயங்களில் ஈடுபட்டுப் பயன் பெறலாம். 

கிரகண காலத்தில் கர்ப்பிணிப்பெண்கள் வெளியே வருவதால் கதிர்வீச்சுக்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்பதால் அவர்களை வெளியே செல்ல வேண்டாம் எனக் கூறுவது இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. 

மொத்தத்தில் கிரகண காலம் என்பது நமது ஆன்மீக சக்திகளைப் பெருக்கிக் கொள்ள உதவும் அற்புதமான காலம் ஆகும். எனவே இந்தக் காலத்தைப் பயன்கொண்டு நமது ஆன்மசக்தியைப் பெருக்கிக் கொள்வோம். நம் முன்னோர்கள் இன்றைய அறிவியல் முன்னேற்ற நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரேயே அறிவியலில் சிறந்து விளங்கினார்கள் என்பதனை நமது இளந்தலைமுறைகளுக்கு இந்தச் செய்திகளின் மூலம் எடுத்துச் சொல்வது நமது கடமையாகும்.

சந்திர கிரகணம் வருகின்ற ஜூலை 27-ம் நாள் இரவு 11.54 மணிக்கு தொடங்கி 28-ம் தேதி அதிகாலை 3.49 மணிக்கு நிறைவடைக்கின்றது. 

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் - பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com