உங்கள் ராசிப்படி இந்த வாரம் எப்படி இருக்கும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 8 - ஜூன் 14) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 
உங்கள் ராசிப்படி இந்த வாரம் எப்படி இருக்கும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 8 - ஜூன் 14) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வரவுக்குத் தகுந்த செலவுகளைச் செய்ய நேரிடும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. யோசிக்காமல் வாக்கு கொடுப்பதோ, அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதோ கூடாது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். பயணங்களால் பலன் அடைவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு மிதமாக இருக்கும். கடமை தவறாமல் உழைக்கவும். வியாபாரிகளுக்கு சுமுகமான நிலைமை தென்படும். லாபத்தால் மனம் திருப்தியடையும். விவசாயிகளுக்கு குத்தகைகளால் ஏமாற்றமும் இழப்புகளும் உண்டாகும். கடுமையாக உழைத்து மகசூலைப் பெருக்க வேண்டியிருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். எதிரிகளால் தொல்லைகள் வராது. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். உறவினர்களிடம் நிலவி வந்த மனக்கசப்பு நீங்கும். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளவும்.

பரிகாரம்: திங்களன்று விநாயகரையும் செவ்வாயன்று துர்க்கையையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் வெற்றியடையும். அனுகூலமான நேரமிது. தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீர்படும். வருமானத்திற்கு குறைவு இருக்காது. எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த குழப்பங்கள் நீங்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகள் சுமுகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் புதுமையான யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். விவசாயிகளுக்கு கொள் முதலில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடைகள் வைத்திருபோர் எதிர்பார்த்த வருமானம் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்கள் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுப்பீர்கள். பெண்மணிகள் கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். சுறுசுறுப்புடன் விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஞாயிறன்று சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 9, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். அதேசமயம் உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். இதனால் சற்று குழப்பமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். தந்தை வழி சொத்துக்களில் சிறு வில்லங்கம் தோன்றும்.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைத்து இரட்டிப்பு லாபத்தை அள்ளுவார்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக இருந்தாலும் புதிய முயற்சிகளை இந்த வாரம் தவிர்க்கவும். விவசாயிகளின் செயலாற்றும் திறன் கூடும். எதிர்கால விவசாயத் தேவைகளுக்காக சேமிப்பில் ஈடுபடுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். புதிய பொறுப்புகள் தேடிவரும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலன் பெறுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். கோரிக்கைகள் நிறைவேறக் காண்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை வழி படவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தன்னம்பிக்கை கூடும். பயணங்கள் லாபம் அளிக்கும். சிலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். உடல் நலம் சிறப்பாகவே இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைக் குறித்த நேரத்திற்குள் முடிப்பார்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் சலுகைகளையும் பெறுவார்கள். பயணங்களால் நன்மை அடைவார்கள். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய குத்தகைகள் எடுக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றகரமான சூழ்நிலைகள் அமையாது. மேலிடத்தின் அதிருப்தி குழப்பத்திலாழ்த்தும்.  கலைத்துறையினர் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வேலையில் மட்டுமே குறியாக இருக்கவும். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.   மாணவமணிகள் அதிக  அக்கறையுடன் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்குவீர்கள்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரவுக்கேற்ற செலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களின் அலட்சியப் போக்கை பெரிதுப் படுத்த வேண்டாம். சகோதர வழி உறவுகளில் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி கிட்டும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைச் சீராகச் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் சிறு தடைகளைச் சந்திக்க நேரலாம். கொடுக்கல் வாங்கல்கள் சற்று கடினமாகவே இருக்கும். விவசாயிகள் நன்கு உழைத்து பொருளீட்டுவார்கள். மகசூல் நன்றாக இருப்பதால் கழனிகளை விரிவுப் படுத்தலாம்.  

அரசியல்வாதிகளைத் தேடி, புதிய பதவிகள் வரும். எதிரிகள் உங்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருப்பார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை தெரிவதால் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். 
மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்: முருகரையும் துர்க்கையையும் வழிபட்டு நலன் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 10, 11. 

சந்திராஷ்டமம்: 8, 9.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் உன்னதமான ஒரு தருணமிது. பழைய கடன்கள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் நன்மை அடைவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு சிறிய பிரச்னைகள் தோன்றி மறையும். மேலதிகாரிகள் உங்களிடம் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளைத் தேடி பலவகையிலும் லாபம் வரும். வியாபாரத்தில் புதிய வளர்ச்சி தென்படும். விவசாயிகளுக்கு அமோகமான விளைச்சல் இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடும் எண்ணம் மேலோங்கும்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அனைவரையும் திருப்திப் படுத்தும். புதிய பொறுப்புகள் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவுக்கு குறைவிருக்காது. ரசிகர்களின் ஆதரவு பெருகும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகளுக்கான கடமைகளைச் செவ்வனே செய்து மகிழ்வார்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை செலுத்தவும். விளையாடும்போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: மஹாலட்சுமியையும் ராகுபகவானையும் தீபமேற்றி வழிபடுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 9, 12. 

சந்திராஷ்டமம்: 10, 11.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிறப்புகள் கூடும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உழைப்பை அதிகரித்துக் கொள்வீர்கள். மதிப்பு மரியாதைக்கு எந்த குறைவும் இருக்காது. சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு குறைவாக கிடைத்தாலும் கொடுத்த வேலைகளை நன்றாகச் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்காதீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும்.

அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும். தொண்டர்களால் மன வருத்தங்களுக்கு ஆளாவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். எதிர்பார்த்த உதவிகளையும் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடமும் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் பெருமாள்} தாயாரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 14. 

சந்திராஷ்டமம்: 12, 13.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சிகரமான நேரமிது. திட்டமிட்ட வேலைகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். எல்லாருக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். உற்றார் உறவினர்களின் அபத்தப் பேச்சுகளைப் பெரிதுப் படுத்த மாட்டீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆனால் சக ஊழியர்கள் உங்களிடம் பகைமை பாராட்டுவார்கள். வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வந்து சேரும். இருப்பினும் வரவு செலவு விஷயங்களில் அக்கறை தேûவை. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சில பிரச்னைகள் தோன்றும். கட்சித் தலைமையிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். புகழ் பாராட்டு கிடைக்கத் தாமதமாகும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டும் அனுமனை வணங்கியும் நலன் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 13. 

சந்திராஷ்டமம்: 14.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மனதில் ஏற்படும் பயங்களும் கவலைகளும் மற்ற வேலைகளில் இடையூறுகளை ஏற்படுத்தும். ஆனாலும் வார இறுதியில் இத்தகைய நிலமைகள் பறந்தோடி விடும். செலவினங்கள் சற்று அதிகமாக இருக்கும். அலைபாயும் மனதைக் கட்டுப் படுத்தவும். 

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டது போல் முடிப்பார்கள். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் லாபங்களைக் காண்பார்கள். புதிய முதலீடுகளில் நண்பர்களை ஆலோசித்து ஈடுபடவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் புதிய குத்தகைகளில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். பதவி உயர்வும் பாராட்டும் பெறுவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும்.  மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள். பெண்மணிகள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகள் கல்வியில் வளர்ச்சியடைய முயற்சி எடுக்க வேண்டிய நேரமிது.

பரிகாரம்: ஞாயிறன்று சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பெயரும் புகழும் வளரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பேசும்போது கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். ஆசைகள் கைகூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு அலைச்சல் டென்ஷன் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். லாபம் அதிகரிக்கும். விவசாய நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். 

அரசியல்வாதிகள் அனாவசியப் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரமில்லை. 

கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன்களை அடைய முடியும். பெண்மணிகள் எதையும் புரிந்து கொண்டு கவனமாகச் செயல்படவும். மாணவமணிகள் அதிகம் உழைத்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 13. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம்(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மனதிலும் உடலிலும் புதிய தெம்பு ஏற்படும். அனைத்துச் செயல்களிலும் தனி முத்திரை பதிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். மற்றவர்களைச் சார்ந்து செய்து வந்த செயல்களை நீங்களே தனியாகச் செய்யத் தொடங்கும் நேரமிது. 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் பகை நீங்கும். வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரிய நேரிடலாம். புதிய கடன்கள் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை அதிகரிக்கும். நிலத்தின் மீது போதிய கவனம் செலுத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். கலைத்துறையினரின் உழைப்பிற்கு மரியாதை கிட்டும். நண்பர்களின் உதவியுடன் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவு சீராக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: வியாழக்கிழமையன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 12, 14. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

செயல்கள் யாவும் தடைகளைத் தாண்டி வெற்றி பெறும். பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் நிறைந்து காணப்படும். சிலருக்கு வாகனம் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வரமாட்டார்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைப்  பதற்றப் படாமல் செய்வார்கள். சக ஊழியர்களின் பாராமுகத்தைப் பெரிது படுத்த மாட்டார்கள். வியாபாரிகளுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களை சந்தையில் நல்ல விலைக்கு விற்பார்கள். சகாய விலையில் விதைகளை வாங்கி பயிர் செய்ய முனைவார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பார்கள். கட்சிக்காரர்கள் கொடுக்கும் நெருக்கடியைச் சமாளிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும்.  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையும். மாணவ
மணிகளுக்கு உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கும். 

பரிகாரம்:  தினமும் "நமசிவாய' மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com