எண்ணத்தைச் செயலாக மாற்றும் சிம்ம ராசிக்காரர்களே! உங்களின் குணம் இதுதான்!

பொதுவாகச் சொன்னால் சிம்மராசிக்காரர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை பெற்றவர்.
எண்ணத்தைச் செயலாக மாற்றும் சிம்ம ராசிக்காரர்களே! உங்களின் குணம் இதுதான்!

பொதுவாகச் சொன்னால் சிம்மராசிக்காரர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை பெற்றவர். எடுத்த கரியத்தை வேகமாகச் சிந்தித்துச் செயலாற்றும் திறனும் உடல் வலுவும் உள்ளத் திண்மையும் பெற்று விளங்குவர். 

இந்த ராசிக்காரர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் பிறருக்கு உதவும் வகையில் அமைந்திருக்கும். இளகிய அன்பு உள்ளம் கொண்டவர், எல்லோரிடமும் இதமாகப் பேசுவர். 

தாங்கள் காட்டும் அன்பைப் பிறர் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவர். தங்களின் செயலையும், பேச்சையும் புரிந்துகொண்டு பாராட்ட வேண்டுமென்று எண்ணுபவர். அதாவது ஓரளவு விளம்பரப் பிரியர் என்று சொல்லலாம். 

ஆனால் தங்களுக்கு இல்லாத யோக்கியதைகளை எல்லாம் டமாரம் அடித்துக்கொண்டு புகழும் விளம்பரமும் பெறக் கொஞ்சமும் விரும்பமாட்டார்கள். இந்த ராசி அன்பர்கள் செய்யும் செயலும், பேச்சும் மிக முக்கியமானதாக மற்றவருக்கு பிரயோஜனப்படும் வகையில் அமைந்திருக்கும். 

ஏதாவது சமூகசேவை நிறுவனத்திலோ அலுவலகத்திலோ இவர்கள் இரண்டுநாள் போகாவிட்டால் இவர்களுடைய வராமை பலருக்குப் பளிச்சென்று தெரியும். பத்தோடு பதினொன்றாக இவர்கள் விளங்கமாட்டார்கள். இவர்களுடைய பேச்சும் செயலும் கவர்ச்சியாக இருக்கும். பிறரைப் பார்த்ததும் எடை போடுவதில் சமர்த்தியசாலி. 

மேஷ ராசிக்காரர்களும் லட்சிய வாழ்வு வாழவே பிரியப்படுவர். அவர்கள் லட்சியம் செயலுருவம் பெறாமல் பெரும்பாலும் எண்ண அளவிலேயே நின்றுவிடும். ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் சப்தம் இல்லாமல் தங்களுடைய குறிக்கோளை நடைமுறையில் காட்டிவிடுவர். இந்தத் திறமை இவர்களிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். மனிதனால் நினைத்ததைச் செய்ய முடியும் என்ற கருத்தில் நம்பிக்கையே காரணம். 

எதைச் செய்தாலும் சிறப்பாக உயர்வாகச் செய்ய வேண்டும் என்பது இயற்கைக் குணம். இந்தச் சாதனையைச் செய்யப் பெரும்பாலும் இவர்களுக்கு இறையருளும் தக்க சமயங்களில் கைகொடுக்கும். மூன்று நெருப்பு ராசிகளில் இது மத்தியராசியாக இருப்பதாலும் நிலைத்த ராசியி இது இரண்டாவதாக இருப்பதாலும் இவர்களின் உள்ளத்தில் உருவாகும் தீர்மானங்கள் பரபரப்பு ஊட்டும். 

நடைமுறைக்கு ஒற்றதாகவும் விளங்கும். இவர்களின் எண்ணங்களின் உறுதியைவிட விருப்பமே அதிகமாகக் காணப்படும். இவர்களுக்கு எல்லோரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணமிருக்கும். இதயம் கனிந்த அன்புக் கட்டளைகளின் மூலம் பிறரை வசப்படுத்தவே விரும்புவர். இரக்கச் சுபாவம் மிகுந்தவர். இதயத்திலிருந்து அன்பும் தர்மசிந்தையும் இரக்க உணர்வும் சுரக்க வேண்டுமென்று சொல்வார்கள் அல்லவா? அந்த நிலையை இவர்களிடம் காணலாம். வேதாந்தக் கருத்துக்களை வாழ்க்கைக்கு ஏற்ற படியும் லட்சியத்தை நடைமுறைக்கு வரும்படியும் இணைத்துச் செயலாற்றுவதில் வல்லவர். 

சிம்மராசிக்குச் சூரியன் உரியவன் அல்லவா? ஆனால் ராசிநாதன் சூரியன் சரியாக அமையாதிருந்தால் தங்களின் சக்தியை எல்லாம் தங்களுக்காகவே உபயோகப்படுத்திக் கொள்ளும் சுயநலப் புலியாகவும் விளங்குவர். மனபலம் மிகையாக நிறைந்தவர்களையும் வலுவிழந்தவர்களையும் இந்த ராசியில் காணலாம். இவர்களுடைய 

தாராளமனப்பான்மையைத் தங்களின் சுயநலத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்ள விரும்பும் கபட தாரிகளின் வலையில் இவர்கள் சிக்கிக் கொள்வர். ஆன்மீகச் சிறப்புக்கும் சக்திப் பெருக்கத்துக்கும் இந்த ராசியின் மூலமாகவே கதிரவனின் கிரணங்கள் பாய்ந்து ஊக்கம் அளிக்கின்றன என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன. மற்ற 
ராசி அன்பர்களைவிட இவர்கள் மிகச் சுலபத்தில் வாழ்க்கையின் ரகசியங்களைப் புரிந்து கொள்வர். 

ஆன்மிகக் கருத்துக்களை உணர்ந்து அவற்றின்படி நடந்து பிறருக்கு உதவியாக வாழ்க்கையை நடத்துவதில் இந்த ராசிக்காரர் முதன்மை பெற்றிருப்பர். இந்தச் சிறப்புக்கு சூரியனின் அமைப்பும் குருவின் கடாக்ஷமும் ஜாதகத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டும். 

சிம்மராசிக்காரர்கள் எதையும் ஒரு வேகத்தோடு செய்வதால் இவர்களுக்கு ஓய்வு மிகத்தேவை. அதிகாரமுள்ள பதவிகள் வகித்தாலும் சொந்தத் தொழிலே இவர்களுக்கு ஏற்றது. நகை, வியாபாரம் இவர்களுக்கு ஏற்ற தொழில். காதல் கதைகள் நாடகங்கள் எழுதுவதில் இணையற்று விளங்குவர். 

ராஜக்கிரகமான சூரியனும் நன்கு அமைந்திருந்தால் கவிஞர்களாகவும் சிறந்த வித்வான்களாகவும் விளங்குவர். மன உறுதியும் உடல் வலுவும் இவர்களுக்கிருந்தாலும் அதிகமாக உடல் உழைப்பை இவர்கள் விரும்ப மாட்டார்கள். நிர்வாகத்திலும் நம்பிக்கைக்கு உகந்தவர்களாகவும் இருப்பார்கள். 

தாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று சாதிக்கும் திறமையும் சுயக்கட்டுப்பாடும் உள்ள தனித்தன்மை வாய்ந்தவர்களாகவும் இவர்களை வர்ணிக்கலாம். கிரக அமைப்பு சரியாக அமையாமல் பிறந்தவர்களைத் தவிர, இந்த ராசி நேயர்களிடம் ஒரு பெருந்தன்மையைக் காணமுடியும். தங்களுடைய செயலின் பலனைக் கொண்டே தங்களின் உள்ளத்தைச் செம்மைப்படுத்திக் கொள்வர். 

சிம்ம ராசிக்குச் சூரியன் ஆட்சிக் கிரகம். ஆகையால் உஷ்ண சம்பந்தமான நோய்களும், இதயம், வயிறு போன்ற பாகங்களில் பாதிப்பும் ஏற்படும். சிம்மராசிக் கணவனோ மனைவியோ தங்கள் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்று விரும்புவர். 

இந்த ராசிக்காரர்களுக்கு பிடித்த சுவை காரம். கோதுமை கலந்த காரப்பட்சணங்களை இவர்கள் உகந்து சாப்பிடுவர். பிடித்த சுவை என்று சொல்லும்போது இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்தையும் கவனிக்க வேண்டும். சுதந்திர நோக்கும் மன உறுதியும் கொண்டவர்கள். ஜொலிக்கும் கண்களும், கம்பீரமான உடல் வாகும் கொண்டவர்கள். 
அதிகமான பால், பழம், குளிர்ந்த ஆகாரங்களைச் சாப்பிடுதல் உடல் நலத்தைக் காத்துக்கொள்ள இயலும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com