பலத்த பாதுகாப்புடன் ஜூன் 28-ல் தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை

2018-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்காக பலத்த..
பலத்த பாதுகாப்புடன் ஜூன் 28-ல் தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை

2018-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, 

வரும் 28-ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. யாத்திரையில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் அரங்கேறாமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு பாதுகாப்பு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் துணையுடன் யாத்ரீகர்கள் எங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது கண்காணிக்கப்படும். 

கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும். துணை ராணுவப் படையினர், ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். துணை ராணுவ வீரர்கள் 22,500 பேரை பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக அனுப்பி வைக்குமாறு ஜம்மு-காஷ்மீர் காவல் துறை கோரியுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

ஜம்மு-காஷ்மீரில் கடந்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமர்நாத் யாத்திரைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தார். அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக இந்த ஆண்டு சுமார் 40 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கடந்த ஆண்டுஏறக்குறைய 35ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த ஆண்டு 2.60 லட்சம் பேர் அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com