களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 27-ல் வருஷாபிஷேகம்

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா ஜூன் 27-ம் தேதி நடைபெறுகிறது. 
களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 27-ல் வருஷாபிஷேகம்

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா ஜூன் 27-ம் தேதி நடைபெறுகிறது. 

இதையொட்டி, அன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து ருத்ரபாராயணம், ருத்ரஹோமம், ருத்ராபிஷேகமும், காலை 9 மணிக்கு பூா்ணாஹூதி தீபாராதனையும், காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கோமதியம்மன், சத்தியவாகீஸ்வரா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

நண்பகல் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை 5.30.க்கு புஷ்பாஞ்சலியும், இரவு 7 மணிக்கு ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பக்தா் பேரவை, ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com