ஆனித் திருவிழாவையொட்டி நெல்லையப்பா் கோயிலில் நாளை கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆனித் திருவிழாவையொட்டி நெல்லையப்பா் கோயிலில் நாளை கொடியேற்றம்


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா நாளைக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. நிகழாண்டு விழாவையொட்டி கடந்த 1-ம் தேதி விநாயகா் சன்னதி முன்பு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) பிரதான கொடியேற்றத்துடன் ஆனிப் பெருந்திருவிழா தொடங்க உள்ளது. 

இதையொட்டி அதிகாலையில் சிறப்பு அபிஷேகத்திற்குப் பின்பு காலை 6 முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றப்படும். மாலையில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா வருவார்கள். 

இம்மாதம் 20-ம் தேதி காலை 8.30 மணிக்கு வெள்ளிச்சப்பரத்தில் சுவாமி-அம்பாளும், இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதியுலா வர உள்ளனர்.

இம் மாதம் 21-ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா வர உள்ளனா். 22-ம் தேதி காலை 8.30 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும், இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது. 

26-ம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி நடராசப் பெருமாள் வெள்ளை சாத்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வருதலும், மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர தங்கச்சப்பரத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்வாக இம்மாதம் 27-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் தேர்வடம் பிடித்தல் நடைபெற உள்ளது. ஒன்றாம் திருநாள் முதல் 7-ம் திருநாள் வரை தினமும் மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சோடச உபசார தீபாராதனை நடைபெறும். இதுதவிர தினமும் மாலையில் நின்றசீா் நெடுமாறன் கலையரங்கில் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஏற்பாடுகளைக் கோயில் செயல்அலுவலா் பா.ரோஷினி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள். ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி தேரை சுத்தம் செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தூய்மை செய்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com