நந்தியெம் பெருமானுக்கு வெள்ளிக்கவசம் சாற்றும் விழா

சென்னை மாநகரில் விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நடேசன் நகரில் உள்ள ஸ்ரீசிவ விஷ்ணு ஆலயம் பக்தர்களால் போற்றி வழிபாடுகள் சிறப்ப்க நடைபெற்று வருகின்றன. 
நந்தியெம் பெருமானுக்கு வெள்ளிக்கவசம் சாற்றும் விழா


சென்னை மாநகரில் விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நடேசன் நகரில் உள்ள ஸ்ரீசிவ விஷ்ணு ஆலயம் பக்தர்களால் போற்றி வழிபாடுகள் சிறப்ப்க நடைபெற்று வருகின்றன. 

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப இத்திருக்கோயிலில் மூன்று நிலை ராஜபோபுரம் கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இக்கோயிலில் அருள்மிகு தர்ம சம்பர்த்தினி அம்பாள் சமேதரராக இறைவன் ஸ்ரீ ராமநாதேசுவரர் எழுந்தருளி அருள்புரிகின்றார். அவரது சன்னிதி எதிரே நந்திபகவான் எழுந்தருளியுள்ளார். பிரதோஷ நாட்களில் இவருக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானவர் நந்தியெம்பெருமான். அவரை ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத் என்ற காய்த்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதின் மூலம் குருவருள் கிடைக்கும். துன்பங்கள் அகலும். ஆனந்த வாழ்வு கிடைக்கும். சிவபெருமானின் அருளும் ஆசியும் கிடைக்கும். 

நந்தியெம்பெருமானுக்கு பக்தர்களின் ஆதரவுடன் வெள்ளிக்கவசமும், வெள்ளி மணிமாலையும் சாற்றும் விழா 17.06.18 அன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலையில் விக்னேசுவர பூஜை, கலசஸ்தாபனம் - ஸ்ரீ நந்திகேசுவரர் மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி முடிந்து நந்தியெம் பெருமானுக்கு புதிய வெள்ளிக்கவசமும் - வெள்ளி மணிகளால் ஆன மாலையும் அணிவிக்கப்பெற்று தீபாராதனை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியின் தொடர்பாக மாலையில் நந்தி பகவானின் சிறப்புகள் குறித்த பாரம்பரிய நடன நிகழ்ச்சி உடுமலை செந்தில் அவர்களால் நடத்தப்பெற்றது. இவ்வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தியெம்பெருமானைப் போற்றி வழிபட்டு மகிழ்ச்சி அடைந்தனர். 

தொடர்புக்கு 9840094246

தகவல் - கி. ஸ்ரீதரன் - 9445671834

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com