நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா தொடக்கம்: ஜூன் 27இல் தேரோட்டம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி-அம்பாள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி-அம்பாள்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. நிகழாண்டு விழாவையொட்டி கடந்த 1ஆம் தேதி விநாயகர் சன்னதி முன்பு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பிரதான கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி, கோயில் செயல் அலுவலர் பா.ரோஷினி உள்பட பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
புதன்கிழமை (ஜூன் 20) காலை 8.30 மணிக்கு வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி-அம்பாளும், இரவு 7 மணிக்கு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும், வெள்ளி கமல வாகனத்தில் அம்பாளும் வீதியுலா வர உள்ளனர். இம் மாதம் 21ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா வர உள்ளனர்.
இம் மாதம் 26ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வருதலும், மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர தங்கச் சப்பரத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 27ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் தேரோட்டம் நடைபெற உள்ளது.
நெல்லையப்பர் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி ரத வீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தேரோட்ட நாளில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com