கைலாஷ் மானசரோவர் முதல் பிரிவு யாத்ரீகர்கள் குழு நாது லா பகுதியை கடந்ததாகத் தகவல்

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற  முதல் பிரிவைச் சேர்ந்த யாத்ரீகர்கள் குழு நாதுலா கணவாய் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
கைலாஷ் மானசரோவர் முதல் பிரிவு யாத்ரீகர்கள் குழு நாது லா பகுதியை கடந்ததாகத் தகவல்

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற  முதல் பிரிவைச் சேர்ந்த யாத்ரீகர்கள் குழு நாதுலா கணவாய் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கப்படும். இந்நிலையில் இந்தாண்டுக்கான யாத்திரையை சிக்கிம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.சி.குப்தா கடந்த 15-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

கைலாஷ் மானசரோவருக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய், சிக்கமில் உள்ள நாது லா கணவாய் ஆகிய வழிகளில் செல்லலாம். டோக்காலாம் விவகாரத்துக்குப் பிறகு, நாது லா வழியை சீன அரசு தற்காலிகமாக மூடி வைத்திருந்தது. மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அந்த வழி மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், மாங்த்தி பகுதியில் இருந்து புறப்பட்ட 58 பக்தர்கள் கொண்ட முதல் யாத்ரீகர்கள் குழு மலைவழியாக நடந்து வந்து கஞ்சி பகுதியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 17,500 அடி உயரமுள்ள லிப்புலேக் கணவாய் வழியாக நாது லா பகுதியை நேற்று காலை வந்தடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் பிரிவு யாத்ரீகர்கள் குழு கேங்டாக் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இரண்டாவது யாத்ரீகர்கள் குழு IAF எலிகாப்டர் மூலம் நாபிதாங் பகுதியில் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com