நோயின்றி வாழ ஆசையா? வழிபடுங்கள் தெய்வீக மருத்துவரை!

நாம் அனைவருமே நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆனால், வயதும், சூழ்நிலையும்...
நோயின்றி வாழ ஆசையா? வழிபடுங்கள் தெய்வீக மருத்துவரை!

நாம் அனைவருமே நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆனால், வயதும், சூழ்நிலையும் நம்மை ஏதேனும் ஒரு நோயில் தள்ளிவிடுகிறது. இதிலிருந்து மாண்டு, மீண்டு வருவதற்குள் ஒருவழியாகி ஓய்ந்து விடுகிறோம். வந்த நோய்க்கும், இனி எந்த நோயும் நம்மை அண்டாமல் இருக்கவும் நோய்களை தீர்க்கும் தெய்வீக மருத்துவரை வழிபட்டு வாழ்வை வளமாக மாற்றிடுவோம். 

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை அமிர்தம் வேண்டிக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதியொன்று எழுந்தது. அந்த ஜோதியில் ஒரு மஹாபுருஷர் தோன்றினார். கற்பனைக்கு எட்டாத சௌந்தரியத்துடன் காட்சி தந்த அவரின் கம்பீரமான தோற்றம், நீண்ட உறுதியான நான்கு கரங்கள், மேல் இரண்டு திருக்கரங்களில் தாங்கிய சங்கு சக்கரம், கீழிரண்டு திருக்கரங்களில் ஒன்றில் அட்டைப்பூச்சி மற்றொன்றில் அமிர்த கலசம்.. பாற்கடலிலிருந்து தோன்றி அந்த திருக்கோலத்தைக் கண்ட அமரர்கள் வியந்து துதித்தனர். 

யார் அவர்? அவர்தான் "தன்வந்திரி" என்ற திருநாமம் கொண்ட தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வராகப் போற்றப்படுபவர் இவரே! இவர் அளித்த அமிர்தத்தினால் தான் தேவர்கள் மூப்பு நோய் அண்டா - மரணமில்லாப் பெருவாழ்வைப் பெற்றனர். 

தன்வந்திரி கொண்டு வந்த அமிர்தத்தை எப்படியோ ராகு, கேது என்ற அசுரர்கள் பெற்றனர். அதனால்தான் அவர்களும் நவக்கிரங்களில் இடம் பிடித்தனர். ஊனமுற்றாலும் உயிர் பிழைத்து, சூரிய சந்திரர்களைப் பிடித்து, அவ்வப்போது கிரகண காலங்களை ஏற்படுத்தி வருகின்றனர் ராகுவும், கேதுவும். என்றாலும் திருமாலின் திருவருளால் மாந்தர்கள் காக்கப்பட்டு வருகின்றனர். 

மாந்தர்களுக்கு அவரவர்களின் கர்மவினையால் ஏற்படும் நோய் நொடிகளைப் போக்க திருமாலே தன்வந்த்ரி பகவானாகவும் அவதரித்தார் என்ற கருத்தும் உண்டு. தன்வந்தரி பகவான், பதினென் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். சித்த மருத்துவ ஆராய்ச்சி நூல்களின் தொகுப்பு 'தன்வந்தரி நிகண்டு' என்ற பெயரில் பிரபலமாகவுள்ளது. ஆயுர்வேத வைத்தியம் அவர் அளித்த பரிசே! விஞ்ஞானமயமான இந்த உலகத்தில், பல நூதன நோய்கள் மாந்தர்களை வருத்துகின்றன. 

இதற்கு மாற்றாக தெய்வ சக்தியை வேண்டி தன்வந்த்ரி பகவானுக்கு வழிபாடுகளும், ஹோமங்களும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன. தன்வந்த்ரி மஹாமந்திரம் ஜெபம் செய்து அதனால் மட்டுமே பலனைப் பெற்று விடலாம். வேறு பல மந்திரங்கள் மந்திர ஜெப புரச்சரனை நெறிகளை ஒட்டிச் செய்யப்பெறும் ஹோமம், தர்ப்பணம், மார்ஜனம் போஜனம், அர்ப்பணம் ஆகிய ஆறு நெறிகளுடன் கூடியதாக விளங்கும். 

சில மந்திரங்கள் ஜெபம், தர்ப்பணம் என்ற இரண்டினால் மட்டுமே பலன் தரும். மந்திரங்கள் பலன் தருவதற்கு பல்வேறு வழிமுறைகளை மந்திர சாஸ்திர நூல்கள் எடுத்துச் சொல்லி வழிகாட்டுகின்றன. உபாசனை நெறிமுறைகளில் வழிவழி வழக்கங்களாகப் பலன் தரும் நெறிகள், அந்தந்த நெறியாளர்களுக்குள்ளாகவே உள்ளன. நாம் எல்லாவற்றிற்குள்ளும் புகுந்து வெளிப் போந்து புலர்வதால் பல செய்திகளை ஒளியாகவும், தெளிவாகவும் சொல்ல முடிகிறது. 

எல்லோரையுமே ஈர்த்துக் கொண்டு தேரை இழுப்பதைப் போல ஜெபம் செய்கின்றவர்கள் எந்தவிதமான இடர்பாடுகளும் இல்லாமல் முழுப் பலனையும் சாஸ்திரத்தில் உள்ள மகத்தான ரகசியம். இதனால் தான் நாம் செய்யும் ஜெபத்தையே அந்தந்த மூர்த்திகளிடம் அர்ப்பணம் செய்து விடுகின்றோம். 

தன்வந்த்ரி மஹா மந்திரத்திற்கு ஒரு மகத்தான சக்தி, அது சொல்லுகின்றவனையும் கேட்கின்றவனையும் நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றி விடுகின்றது. தன்வந்த்ரி மந்திரம், ஜெபம் தர்ப்பணம், மார்ஜனம், ஹோமம் போன்ற எல்லா அங்கங்களோடு செய்வதுதான் சிறப்பான வழி. இருப்பினும் இது எளிதாக பலிக்கும் என்பதற்காகவே ஜெபமும், தர்ப்பணமும் போதும் என்ற வழிமுறைகளை எடுத்துக்காட்டும். தன்வந்த்ரி மந்திரத்தை நோய்கள் நீக்குவதற்காகச் செய்ய வேண்டி பிரத்யேக முறைகள் பலவாக விளங்குகின்றன. அவற்றில் சில..

|| ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய ||

|| தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய ||

|| சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய ||

|| த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ||

|| ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப ||

|| ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயண ஸ்வாஹா ||


|| சதுர்புஜம் பீத வஸ்திரம் ||

|| ஸர்வாலங்கார சோபிதம் ||

|| த்யோயேத் தன்வந்த்ரிம் ||

|| தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம் ||

இந்தத் தன்வந்திரி ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை என இரு வேனையும் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com