ஸ்ரீ சத்குரு தியாகராஜர் ஆராதனை உற்சவம்

செங்கல்பட்டில் கானவீணா வித்யாலயா மற்றும் இசைக்கலைஞர்கள் சார்பில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
செங்கல்பட்டில் நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை உற்சவத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சி. (வலது) விழாவை கண்டு களித்தவர்கள்.
செங்கல்பட்டில் நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை உற்சவத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சி. (வலது) விழாவை கண்டு களித்தவர்கள்.

செங்கல்பட்டில் கானவீணா வித்யாலயா மற்றும் இசைக்கலைஞர்கள் சார்பில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
ஞாயிற்றுக்கிழமை காலை இசைக் கலைஞர்களின் மங்கள இசையும், செங்கல்பட்டு விஜயேந்திர பாகவதரின் சம்பிரதாய பஜனை மற்றும் உஞ்ச விருத்தியும் நடைபெற்றது. 
பழையசீவரம் பீ.பி.ரவிசந்திரன் குழுவினரின் நாகஸ்வர இசை நிகழ்ச்சியும், அடுத்து ஊரப்பாக்கம் சுவாசம் குழுவினர் மற்றும் செங்கல்பட்டு சத்சங்க குழுவினரின் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றது. 
பிரபல வித்வான்களுடன் செங்கல்பட்டு கானவீணா இசைப்பள்ளி மற்றும் மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளின் பஞ்சரத்ன கீர்த்தனாஞ்சலியும், மதுரை இசைக்கல்லூரி பேராசிரியர் தியாகராஜனின் மிருதங்கம் மற்றும் நீடாமங்கலம் என்.எஸ்.சுவாமிநாதனின் வயலின் இசை மிருதங்க நிகழ்ச்சியும், செங்கல்பட்டு ஸ்ரீ சத்யசாயி சேவா சமிதி குழுவினர் மற்றும் கான வீணா வித்யாலயா மாணவ மாணவிகளில் வாய்பாட்டு மற்றும் வீணை இசையும், பரதநாட்டியம் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன. 
நிறைவாக இரவு செங்கல்பட்டு விஜயேந்திர பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் மற்றும் ஆஞ்சநேய உற்சவமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கான வீணா வித்யாலயா நிர்வாகி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்க ஆலோசகர் மீரா முரளி மற்றும் இசைக் கலைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர். ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com