சிதம்பரம், ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலையில் ஏப்.20 முதல் மாணவர் சேர்க்கை

சிதம்பரத்தில் உள்ள ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலையில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20 முதல் தொடங்க உள்ளது. 

சிதம்பரத்தில் உள்ள ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலையில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20 முதல் தொடங்க உள்ளது. 

திரு.மணிவாசன் அவர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில், மாணவர்களுக்கு பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், சங்கீதம் மற்றும் தமிழ் கற்றுத்தரப்படுகிறது.

இங்கு சேரும் மாணவர்களுக்கு, உணவு, உடை, இருப்பிடம், இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மதுரை.பொன்.மு.முத்துக்குமரன் மற்றும் மயிலாடுதுறை.சொ.சிவகுமார் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து பாடங்களைச் சொல்லித்தர உள்ளனர். 

மாணவர்கள் வயது வரம்பு 13 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்கள் தேவாரப் பாடசாலையில் சேர்ந்து பயன் பெற கேட்டுக்கொள்கிறோம்

சிதம்பரம் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை 16.9.2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

காலை 5 மணி முதல் 7 மணிவரை சங்கீத பாடம், காலை 8.30 மணிக்கு தினசரி இறைவழிபாடு (நித்திய பாராயணம்) காலை 9 மணிக்கு டிபன், காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை தேவாரப்பாடம் (தினமும் 3 பாடல் ஒப்பித்தல், திருப்பதிகங்களை தவறு இல்லாமல் பார்க்காமல் சந்த அமைப்பில் பாடுதல்) மதியம் 1.15 மணிக்கு மதிய உணவு, மதியம் 2.30 மணி முதல் 5 மணிவரை புதிய பாடல்களை பாடவைத்தல், மாலை 5.15 மணிக்கு மாணவர்கள், சுண்டல், சத்துமாவு கஞ்சி கொடுக்கப்படும். 
 
மாலை 6 மணி முதல் 7 மணிவரை சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நால்வர் சந்நிதியில் ஆசிரியர்கள் கற்பித்த தேவாரம், திருப்புகழ் பாடல்களை, மிருதங்கத்தோடு பாடுதல் 7.30 மணிக்கு மறுநாள் ஒப்பிக்க வேண்டிய தேவாரப்பாடல்களை மனப்பாடம் செய்தல், இரவு 9 மணிக்கு இரவு டிபன் 
சிறப்பு பயிற்சியாக ஆண்டுக்கு ஒருமுறை மார்கழி மாதம் 7 நாட்கள், பாடல் பெற்ற 40 தலங்கள் சென்று மாணவர்களுக்கு தரிசனம் செய்துவித்து பதிகங்களை ஓதச்செய்தல், மற்றும் குடமுழுக்கு, திருவீதி பாராயணம், மேடைகளில் பாடும் வாய்ப்பு போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்து தரப்படும். 

மாணவர்கள் சேர்க்கை ஏப்ரல் 20 முதல் நடைபெறும்.

மேலதிக விவரங்களுக்குத் தொர்புகொள்ள - அலைபேசி எண்கள் - 9976357609, 9944790380, 9952258281

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com