பித்ருக்களுக்கு எந்த மாதத்தில் தர்ப்பணம் கொடுத்தால் திருப்தியை அளிக்கும்!

நம் தாய், தந்தை வழியே வரும் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளும் விலகும்.
பித்ருக்களுக்கு எந்த மாதத்தில் தர்ப்பணம் கொடுத்தால் திருப்தியை அளிக்கும்!

நம் தாய், தந்தை வழியே வரும் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளும் விலகும். அதன்மூலம் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். எந்த மாதத்தில் தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்கள் திருப்தியடைவார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

• அனுஷம் நட்சத்திரமும், அமாவாசையும் சேரும் கார்த்திகை மாதத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தல், பித்ருக்களுக்கு ஒரு வருடத்திற்கு திருப்தியை அளிக்கும்.

•  ஐப்பசி மாதத்தில் விசாகம் அல்லது சுவாதியில் அமாவாசை வரும். அன்றை தினத்தில் சிரார்த்தம் செய்தாலும் பித்ருக்களுக்கு ஒரு வருடத்திற்கு திருப்தியை அளிக்கும்.

• ஆனி மாதத்தில் திருவாதிரை அல்லது புனர்பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் சிரார்த்தம் செய்தாலும், ஆடி மாதத்தில் பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் சிரார்த்தம் செய்தாலும் பித்ருக்களுக்கு 
12 வருடத்திற்கு திருப்தியளிக்கும்.

• தை மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில், அமாவாசை வரும், மாசி மாதத்தில் சதய நட்சத்திரம் அல்லது பூரட்டாதியில் அமாவாசை வரும். பங்குனியில் பூரட்டாதியில் அமாவாசை வரும். இந்த மூன்று காலங்களும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலமென்று சொல்லப்பட்டுள்ளது.

• மாசி மாதத்து அமாவாசையானது எப்போதாவது சதய நட்சத்திரத்துடன் கூடுமானால், அது மிகவும் புண்ணிய காலம். அந்நேரத்தில் அவிட்டம் நட்சத்திரமும் சேருமாயின், அப்போது பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தவனுக்கு 10,000 ஆண்டுகளுக்கு பித்ருக்களை திருப்தி செய்த பலன் கிடைக்கும். அக்காலத்தில் பூரட்டாதியும் சேருமானால், அதில் பித்ருக்கள் திருப்தியடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாகத் தூங்குவார்கள்.

• சூரிய - சந்திர கிரகண நேரங்களிலும் பித்ருக்களுக்கு யார் ஒருவர்எ ள்ளும், தண்ணீரும் இரைந்தால், அவர் ஆயிரம் ஆண்டுகள் சிரார்த்தம் செய்த பலனை அடைவான்.

சிரார்த்தம் செய்வதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை..

• சிரார்த்தம் செய்பவர் ஒரு மாதம் அல்லது 16 நாட்களுக்கு முன் சவரம், எண்ணெய் தேய்த்தல் போன்றவற்றை செய்யக்கூடாது. பிறர் அன்னத்தை சாப்பிடக்கூடாது.

• கண்டிப்பாக முதல் நாள் இவற்றை செய்யவே கூடாது. சமுத்திரஸ்தானம், புண்ய நதிகளில் ஸ்நானம் செய்த பின்பும், பஞ்சகவ்யம் அருந்தியும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

• ஒரே பசுவிடமிருந்து பெறப்பட்ட பால், தயிர், நெய், சாணம், கோமியம் இவற்றை கலந்து தயாரித்தது தான் பஞ்சகவ்யம் ஆகும்.

• பஞ்சகவ்யம் மிகவும் விசேஷத் தன்மை கொண்டது. இதை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதும் உண்டு. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com