திருவானைக்கா கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்ட விழாவில் சுவாமி, அம்மன் தேரை வடம்பிடித்து இழுத்து வரும் பக்தர்கள்.
திருவானைக்கா கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்ட விழாவில் சுவாமி, அம்மன் தேரை வடம்பிடித்து இழுத்து வரும் பக்தர்கள்.

திருவானைக்கா கோயிலில் பங்குனித் தேரோட்டம்

திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனித் தேரோட்ட விழா பிப்ரவரி 25ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முதல் திருநாளான மார்ச் 14 ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினமும் சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தை வலம் வந்தனர்.
இந்நிலையில் திருத்தேரோட்ட விழா திங்கள்கிழமை காலை 5.35 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, விநாயகர், முருகன் தேர்கள் தேரோடும் வீதியில் வலம் வந்து நிலையை அடைந்தது. இதையடுத்து பெரிய தேரான சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இந்தத் தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து தெற்கு வீதியின் சந்திப்பில் உள்ள நிலையை காலை 11 மணிக்கு நிலையை அடைந்தது. இதனையடுத்து, அம்மன்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இந்தத் தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து 11.30 மணிக்கு நிலையை அடைந்தது. 
முன்னதாக, ஸ்ரீ அண்ணாமலையார் டிரஸ்டை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள் கைலாயம் வாசித்து சிவபுராணம் பாடி வந்தனர்.
தேரோட்ட விழாவில், கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com