மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு 10 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது. 

விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 5.15 முதல் 5.45 மணிக்கு கொடியேற்ற விழா நடைபெற்றது. மார்ச் 24-ல் அதிகார நந்தி காட்சி, திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழா நடக்கிறது. 

மார்ச் 26-ல் வெள்விடை பெருவிழா காட்சி நடக்கிறது. அடுத்த நாள் பல்லக்கு விழாவும். முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான தேர் திருவிழா மார்ச் 28-ல் நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்வார். காலை 6,00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com