சென்னை காளிகாம்பாள் கோயிலில் கோலாகலமாக நடந்தேறிய கொடிமர கும்பாபிஷேகம் 

சென்னை காளிகாம்பாள் கோயிலில் புதிய கொடிமர கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 
சென்னை காளிகாம்பாள் கோயிலில் கோலாகலமாக நடந்தேறிய கொடிமர கும்பாபிஷேகம் 

சென்னை காளிகாம்பாள் கோயிலில் புதிய கொடிமர கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 

தம்புசெட்டி தெருவில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வழிபட்டுச் சென்றுள்ளார்

இக்கோயிலில் 1840-ம் ஆண்டு கோயில் கொடிமரம் அமைக்கப்பட்டது. 178 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் கொடிமரம் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, இக்கோயிலின் புதிய கொடிமரம் பிப்ரவரி 4-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

நேற்று சிவாச்சாரியா அறக்கட்டளை நிர்வாக தலைவர் காளிதாஸ் சிவாச்சாரியா தலைமையில், புதிய கொடி மரத்திற்கான கும்பாபிஷேக விழா கோலாகமாக நடைபெற்றது. 

சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க முலாம் பூசப்பட்ட செப்பு தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com