மத நல்லிணக்கத்துக்கு உதாரணம்: கேரள ரத யாத்திரையில் கலந்துகொள்ளும் இஸ்லாமியர்கள்!

கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலில் நடைபெறும் ரத யாத்திரைக்கு இஸ்லாமியர்களை அழைக்கும் மாண்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
மத நல்லிணக்கத்துக்கு உதாரணம்: கேரள ரத யாத்திரையில் கலந்துகொள்ளும் இஸ்லாமியர்கள்!


கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலில் நடைபெறும் ரத யாத்திரைக்கு இஸ்லாமியர்களை அழைக்கும் மாண்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ உத்யவரா அரசுமன்ஜுஸ்நாத் கோயில். இந்தக் கோயிலில் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான திருவிழா மே 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடத்தப்படுகிறது. 

இந்த கோயிலைச் சேர்ந்த பெரியவர்கள் பக்கத்து கிராமத்தில் உள்ள ஜமாத் மசூதிக்குச் சென்று அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு தங்கள் கிராமத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுகின்றனர். இதேப்போன்று இஸ்லாமிய பெரியவர்களும், இஸ்லாமிய விழாக்களுக்குக் கோயில் பெரியவர்களை அழைக்கின்றனர். 

கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த மத வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். இந்த விழாவின் ஒரு அங்கமாக ரத யாத்திரை நடைபெறும் அதில் இஸ்லாமியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வார்கள். 

இதுகுறித்து டி.எஸ் செயித் கூறுகையில்,

நாங்கள் அனைவரும் கோயில் திருவிழாவில் தவறாமல் கலந்துகொள்வோம். மேலும், மசூதி விழாவின் போது கோயில் அதிகாரிகள் ஒரு டிரக் முழுவதும் காய்கறிகள், நெய் மற்றும் அரிசி ஆகியவை எங்களுக்கு அனுப்பிவைப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்தக் கோயிலை சேர்ந்த தெய்வங்கள் எங்கள் ஊருக்கு சுற்றி வரும் போது மசூதியைச் சேர்ந்த பெரியவர்கள் முன்வந்த எங்களை வரவேற்கின்றனர். கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த முறையைப் பின்பற்றி வருவதாகவும், மத நல்லிணக்கத்துக்கு நல்லதொரு உதாரணமாக இது அமைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com