திருமலையில் பக்தர்கள் புகார் அளிக்க டோல் ப்ரீ எண்கள் அறிவிப்பு 

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 
திருமலையில் பக்தர்கள் புகார் அளிக்க டோல் ப்ரீ எண்கள் அறிவிப்பு 

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

திங்கள்கிழமை காலை தரிசன டோக்கன் முறை மூலம் 26 மணி நேரத்திற்கு பின் வழங்கப்பட்டது. நடைபாதை வழியாக வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர். டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றால் அவர்கள் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பிலாம். 20 ஆயிரத்திற்கு மேற்பட்டு வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற டோல் ப்ரீ எண் மற்றும் 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்டவற்றை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

மேலும் உடனுக்குடன் தீர்வு காண எப்.எம்.எஸ் என்ற ஹெல்ப் லைன் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஊழியர்கள் உரையாற்றுவர்.

சிறிய பிரச்சனைகளை ஊழியர்களும், பெரிய பிரச்சனைக்களை அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பர். அதற்காக பக்தர்கள் 1800425111111 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com