திருமலையில் முறைகேடுகள் நடைபெறுவதாகத் தலைமை அர்ச்சகர் குற்றச்சாட்டு! 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒழுங்கற்ற பல முறைகேடுகள் நடைபெறுவதாகத் தலைமை அர்ச்சகர் ஏ.வி ரமணா தீட்சிதலு குற்றம் சாட்டியுள்ளார். 
திருமலையில் முறைகேடுகள் நடைபெறுவதாகத் தலைமை அர்ச்சகர் குற்றச்சாட்டு! 

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒழுங்கற்ற பல முறைகேடுகள் நடைபெறுவதாகத் தலைமை அர்ச்சகர் ஏ.வி ரமணா தீட்சிதலு குற்றம் சாட்டியுள்ளார். 

உலகின் பணக்கார கோயிலில் ஒன்றாகக் கருதப்படுவது திருமலை திருப்பதி தேவஸ்தானம். பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் உள்ள அர்ச்சர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சண்டை வலுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் ரமணா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கோயிலின் மரியாதை மற்றும் ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதில் தேவஸ்தான நிர்வாகிகளுக்கு இடையில் அநீதி மற்றும் ஊழல் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். கோயிலின் நிதியும், பழமை வாய்ந்த நகைகளும் துஷ்பிரியோகம் செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தற்போது உள்ள அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்து வம்சாவழியாக ஆராதனை செய்யும் திட்டத்தை ரத்து செய்துள்ளது. தற்போது பரம்பரையாக ஆராதனை செய்துவருபவர்களை நீக்கிவிட்டு புதிய அர்ச்சகர்களை அரசு நிய மித்துவருகிறது. இதனால் கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது, 

1996 வரை சரியான முறையில் கோயில் நகைகள் பராமரிக்கப்பட்டு தணிக்கை பதிவு செய்யப்பட்டது. பல தலைமுறைகளாகக் கோயில் ஊழியத்திற்குகென்று எங்களை அர்ப்பணித்து வருகிறோம். ஆனால், இப்பொழுது உள்ள நிர்வாகம் அதற்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது மிகவும் வருத்தம் அளிக்கின்றது. 

கடந்த 22 ஆண்டுகளில் ஆந்திர அரசு ஒருமுறை கூட கோயில் நகைகள் குறித்து தணிக்கை செய்யவில்லை. தற்போது, புதிய ஆபரணங்களை கொண்டு ஏழுமலையானுக்கு அலங்கரிக்கப்படுகிறதே தவிர பாரம்பரியமாக இருந்த பழைய நகைகள் அணிவிப்பதில்லை? அவைகள் என்னவானது என்று கூட தெரியவில்லை? இதற்கு முறையான தணிக்கை கொண்டுவந்து, அவற்றை டிஜிட்டல் மூலம் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், கோயில் நகைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் குறித்து சிபிஐ உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com