பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா? 

பாரம்பரியமிக்க குடும்பங்களில் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் அன்று ஆயுஷ்ய ஹோமம் செய்வதை பார்க்கலாம்.
பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா? 

பாரம்பரியமிக்க குடும்பங்களில் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் அன்று ஆயுஷ்ய ஹோமம் செய்வதை பார்க்கலாம். ஆனால் இன்று பல குடும்பங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிறந்தநாள் என்ற பெயரில் கேக் வெட்டி கேண்டில் அனைத்து கேக்கை முகத்தில் பூசி கொண்டாட்டம் என்ற பெயரில் சமுதாய சீர்கேட்டினை செய்து வருகிறார்கள்.  

அப்த பூர்த்தி

குழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்த பூர்த்தி என்பதை 'ஆண்டு நிறைவு” என்றும் சொல்வார்கள்.

ஜென்ம நக்ஷத்திரம்

ஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வித்து, குழந்தையின் அம்மான் குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்” என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு முறை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்யூ” பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காகச் செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்” என்று இது பெயர் பெற்றது.

ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து நக்ஷத்திர சூக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் ஜெபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு அபிஷேகம் செய்வித்து தீர்த்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தைக் கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

இந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற (இரண்டாவதாக வருகின்ற) நக்ஷத்திரத்திலேயே இதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில சமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அனுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். என்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12 நாழிகை அதாவது 4மணி 48 நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டும்.

இதே முறையில்தான் ஒவ்வொரு பிறந்தநாளையும் அனுஷ்டிக்க வேண்டும். வருடா வருடம் பிறந்தநாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்யும்பொழுது குடும்பத்தோடு சிறிய அளவில் செய்துகொள்ளலாம். என்றாலும் கீழ்க்கண்ட வயதுகளில் பெரிய அளவில் நண்பர்கள் உறவினர்கள் சூழ பெரியார் ஆசிபெற செய்துகொள்வது சிறப்பாகும்.

1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம்.

2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்,

3. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம்.

4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்.

5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம்.

6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம்.

7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.

8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.

9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள்.

10. பூர்ணாபிஷேகம் = 100ஆவது வயதில் சுபதினத்தில்.

ஜென்ம நக்ஷத்திரத்தில் கொண்டாடுவதால் என்ன பலன்?

ஆத்ம காரகனாகிய சூரியன் பிறந்த ஜாதக சூரியனை தொடுவதால் சூரியனின் பரிபூரன அந்த மாதம் முழுவதும் ஆசி நிலவும். சந்திரன் ஜென்ம நக்ஷத்தில் நிற்பதால் சந்திரனின் ஆசியும் கிடைத்துவிடும். சூரியனும் சந்திரனும் முறையே பித்ருகாரகனாகவும் சந்திரன் மாத்ருகாரகனாகவும் இருப்பதால் பெற்றொரின் பரிபூரன அன்பும் ஆசியும் குழந்தைக்கு கிடைத்துவிடும்.

ஆயுஷ்ய ஹோமங்கள் செய்யும்போது ஸ்வாஹா தேவி சஹிதம் அக்னி பகவானை வணங்குவதால் செவ்வாய் மற்றும் முருகனின் அருள் கிட்டும். மாமன்மார்கள் தோள் தூக்குவது மற்றும் ஆசீர்வதிப்பதால் புதன் அருள் நிறையும். புரோஹிதர்கள் எனும் அந்தனர்களை கொண்டு ஹோமங்கள் செய்வதாலும் பெரியவர்கள் ஆசி பெறுவதாலும் குரு அருள் வற்றாமல் கிடைக்கும். கலஸாபிஷேகம் மற்றும் புதுத்துணி விருந்துணவால் சுக்கிரன் அருள் நிறைய கிடைக்கும். எண்ணைத் தேய்த்து குளிப்பதால் சனைஸ்வரன் அருள் கிட்டிவிடும். அம்மாவழி தாத்தா பாட்டிகள் மற்றும் அப்பா வழி தாத்தா பாட்டிகளின் ஆசிகளால் ராகு கேதுகளின் ஆசிகளும் கிட்டிவிடும். நவக்கிரகங்களோடு ஆயுர்தேவதையின் ஆசியும் அளவில்லாமல் கிட்டும். 

பாலாரிஷ்டம்

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 12 வயது வரை ஜாதகம் பார்க்க கூடாது என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. குழந்தையின் முதல் நான்கு வயது வரை தாயின் பாப கர்மத்தையும் ஐந்து வயது முதல் எட்டு வயது வரை தந்தையின் பாப கர்மத்தையும் ஒன்பது வயது முதல் பன்னிரெண்டு வயது வரை தனது சுய பாப கர்மத்தையும் அனுபவிக்கும் காலமாகும். எனவே எந்த வயதில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்பதை பொருத்து கர்ம வினையை தீர்மானிக்கலாம். என்றாலும் பன்னிரெண்டு வயது வரை பாலாரிஷ்ட தோஷங்களை அறிய ஜோதிடம் தடை செய்யவில்லை. ஒரு குழந்தையை பாலரிஷ்ட தோஷம் தாக்கும் காலம் 12வது வரையே ஆகும். எனவே குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 12 வயது வரை கட்டாயம் ஆயுஷ்ய ஹோமம் செய்வது குழந்தையின் ஆயுள் வளர்க்கும் பரிகாரங்களாகும்.

ஆங்கில தேதி பிறந்தநாள் அவசியமா?

இதையெல்லாம் இழந்துவிட்டு ஆங்கில தேதியில் கொண்டாடுவது காலம் காலமாக கடைபிடிக்கும் நமது உன்னதமான மரபுகளையும் கலாசாரத்தையும் விட்டொழித்து அன்னிய கலாசாரத்தில் ஊறி திளைப்பது சரியா? சிந்திப்பீர்! மேலும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த பிறந்த தினத்தில் எதிர்மறையை பரப்பும் விதமாக மைதாவில் செய்த கேக்கை வெட்டுவதும் மெழுகு வர்த்தியை ஊதி அனைப்பதும் என்ன நன்மையை தரப்போகிறது? 

மேலும் ஆங்கில கலாசாரபடி பிறந்தாலும் மணந்தாலும் விவாகரத்தானாலும், காதலித்தாலும், காதல் பிரிவு நேர்ந்தாலும் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் கேக் வெட்டி கேண்டில் அனைத்து கொண்டாடுகின்றனர். இதனால் ஏதாவது நன்மை பயக்குமா? 

இன்னும் சில கார்பரேட் அலுவலகங்களில் பிறந்த நாள் கொண்டாடுகிறேன் பேர்வழி என கூற கேக்கை வெட்டி முகம் மற்றும் தலைகளில் பூசி மகிழ்கின்றனர். நமக்கு ஆயுளை கூட்டும் தெய்வங்களுக்கு இப்படிதான் நன்றி கூறுவதா?

எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஜென்ம நக்ஷத்திரத்தில் தான் எனது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். அப்ப நீங்களும் தயார்தானே? உங்களுக்கு ஜென்ம நக்ஷத்திரம் தெரியவில்லையெனில் உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் போன்ற விவரங்களுடன் என்னை (அஸ்ட்ரோ சுந்தரராஜன்) அனுகினால் உங்கள் ஜாதகம் (ஒரு பக்கம்) இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.


- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com