அற்பாயுள் உள்ளவர்களின் கிரக சேர்க்கைகள் எப்படி இருக்கும்? 

ஒருவரின் ஆயுளைத் தெரிந்து கொள்வதற்கு பொதுவாக 8-ம் பாவம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அற்பாயுள் உள்ளவர்களின் கிரக சேர்க்கைகள் எப்படி இருக்கும்? 

ஒருவரின் ஆயுளைத் தெரிந்து கொள்வதற்கு பொதுவாக 8-ம் பாவம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில் 8-ம் பாவம், 8-ம் பாவத்தில் உள்ள கிரகம், 8-ம் பாவாதிபதி, 8-ம் பாவத்தைப் பார்க்கும் கிரகம், அம்சத்தில் 8-ம் பாவாதிபதியின் பலம், 8-ம் பாவாதிபதி இருக்கும் நட்சத்திராதிபதி ஆயுள் காரகன் சனி இவர்களை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிறார்கள் ஞானிகள்.

ஒருவரின் ஆயுட் காலத்தை நான்கு பிரிவாக பிரித்துள்ளார்கள் ஜோதிடர்கள். அதில், அற்பாயுள் அதாவது 8 வயதில் இருந்து 33 வயது வரை உள்ள ஆயுளைக் குறிக்கும் கிரக சேர்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம். 

* 8-ம் வீட்டில் சனியை தவிர பாவ கிரகங்கள் இருந்தாலும் 6 - 12ம் வீடுகளில் செவ்வாயும், சனியும் இருப்பது அற்பாயுளை தரும்.  

* இரண்டு பாவிகள் லக்னத்திற்கு அல்லது ராசிக்கு 2 - 12ல் இருப்பது (லக்னம் அல்லது ராசி பாவ கர்த்தாரி யோகம் பெறுவது). 

* சனி சிம்ம நவாம்சம் பெற்று ராகு சம்பந்தம் பெறுவது. 

* லக்னாதிபதி லக்னத்திலும், 8-ம் அதிபதி 9-ம், 8-ம் பாவம் பாவிகள் சம்பந்தம் பெறுவது. 

* லக்னம் அல்லது ராசிக்கு 8-ம் அதிபதி 12-ல் அல்லது கேந்திரத்தில் இருப்பது 28 வயது வரை ஆயுளைத் தரும். 

* சனி, சந்திரன், சூரியன் இணைந்து 8-ம் பாவத்தில் இருப்பது 29 வயதைத் தரும். 

* லக்னாதிபதி 8-ம் பாவத்தில் இருந்து பாவிகள் சம்பந்தம் பெற்றாலும் லக்னாதிபதியும், 8-ம் அதிபதியும் 8-ம் பாவத்தில் இருந்தாலும் சூரியன், சந்திரன், சனி இணைந்து 8-ம் பாவத்தில் இருந்தாலும் 30 வயது ஆயுளை தரும். 

* லக்னாதிபதி பலமிழந்தும், பாவிகள் 6-8-12ல் இருப்பதும் அற்ப ஆயுளை தரும். 

பொதுவாக ஆயுளை குறிப்பது 1-3-8-ம் வீடாகும். இவற்றிற்கு முந்தை வீடு அல்லது 12-2-7 இவைகள் ஒருவரைக் கொள்ளும் வல்லமை கொண்டது. இவர்களை மாறகர்கள் என்கிறோம்.

ராசிகளில் மேஷம், கடகம் துலாம் மகரம் ஆகியவை சர ராசிகள் எனப்படும். இவர்களுக்கு 11-ம் வீடு பாதகத்தை கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும் அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். 

உதாரணத்திற்கு மேஷத்திற்கு 11-ம் வீடு கும்பம் அதன் அதிபதி சனி ஆகவே, மேஷத்திற்கு சனி பாதகாதிபதி. கடகத்திற்கு - சுக்கிரன், துலாத்திற்கு - சூரியன், மகரத்திற்கு செவ்வாய் ஆகியோர் பதாகாதிபதி ஆகிறார்கள். பாதகாதிபதிகள் என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள் வேறு எந்தக் கெடுதலையும் கொடுக்கமாட்டார்கள். 

உதாரணமாக துலா ராசியை எடுத்துக்கொண்டால் அதன் அதிபதி சூரியன் 10-ம் வீட்டில் இருந்தால், லாபாதிபதியாக ஜீவணஸ்தானம் சூரியன் அரசாங்க வேலை மற்றும் நல்ல பதவி, ஜாதகருக்கு உயர்ந்த பதவிகளை கொடுப்பார். இவருக்கு ஆயுள் 65 முடிய என்றால் அப்போது சூரிய தசையோ, சூரிய புக்தியோ வருமாயின் அப்போது சூரியன் லாபாதிபதியாக செயல்படமாட்டார், பாதகாதிபதியாகவே செயல்படுவார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com