திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடக்கம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. 
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடக்கம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. 

கந்த சஷ்டி விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து ஆறு நாட்களும் சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்காரங்கள் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான 13-ம் தேதி சூரசம்ஹரமும், 14-ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்பாடு நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றன.

விழா நாள்களில் காலையும், மாலையும் கோயில் கலையரங்கில் பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com