திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவையொட்டி, செவ்வாய்கிழமை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை. 
திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை. 


திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவையொட்டி, செவ்வாய்கிழமை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மலைக்கோயிலில் உள்ள மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம் நடைபெற்றது. பின்னர் தங்கக் கவசமும், பச்சை மாணிக்க மரகதக்கல்லும் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து மாலை 5 மணிக்கு ம.பொ.சி.சாலையில் உள்ள முருகன் கோயிலின் உப கோயிலான சுந்தர விநாயகர் கோயிலில் மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
அதனைத் தொடர்ந்து, முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் பக்தர்கள் ஆகியோர் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பலவகையான 5 டன் மலர்களை சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர், முருகன் கோயில் காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த வள்ளி, தெய்வானையுடன் சண்முக சுவாமிக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவில் தேமுதிக இளைஞர் அணித் தலைவர் சுதீஷ், தேமுதிக மாவட்டச் செயலாளர் 
டி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, டி.எஸ்.பி. சேகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com