பௌர்ணமியையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு..
பௌர்ணமியையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில். இக்கோயிலில் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நவம்பர் 22-ம் தேதி பௌர்ணமி என்பதால், இன்று முதல் வருகிற 23-ம் தேதி வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில்,

தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் சதுரகிரி மலைப்பகுதியில் மழைபெய்யும் பட்சத்தில் பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மழை பெய்யாமல் இருந்தால் மட்டுமே மலை மீது ஏறவும், இறங்கவும் அனுமதி அளிக்கப்படும். அதன்படி இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மலைக்கோயிலுக்கு செல்லலாம் என்று கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com