திருவண்ணாமலையில் கூடுதலாக 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி
திருவண்ணாமலையில் கூடுதலாக 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கூடுதலாக 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நவம்பர் 23-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

கோபுர நுழைவு வாயில், சன்னதி நுழைவு வாயில், வடக்கு மற்றும் தெற்கு ஒத்தவாடை தெருக்கள், மேற்கு கோபுரத்தெரு, ராஜகோபுரம் முன் உள்ள பகுதிகள் உட்பட 103 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தீப திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் கூடுதலாக 24 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் 360 டிகிரி சுழல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com