வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கல்பவிருட்ச வாகன சேவை!

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாள் காலையில் மலையப்ப சுவாமி ராஜமன்னார் அவதாரத்தில் கல்பவிருட்ச (கற்பக மரம்) வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கல்பவிருட்ச வாகன சேவை!

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாள் காலையில் மலையப்ப சுவாமி ராஜமன்னார் அவதாரத்தில் கல்பவிருட்ச (கற்பக மரம்) வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
 ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின்போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை இவ்விழா தொடங்கி, விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் 4ஆம் நாளான சனிக்கிழமை காலையில் மலையப்ப சுவாமி பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்த வரத்தைக் கொடுப்பதாக நம்பிக்கை கொண்டுள்ள கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின் கோயிலுக்குள் உற்சவர்களுக்கு சாத்துமுறையும், கொலு, ஆஸ்தானமும் நடைபெற்றது. பின் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்த களைப்பைப் போக்க அவருக்கு பல்வேறு அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
 அபிஷேகப் பொருள்களை திருமலை ஜீயர்கள் எடுத்துத்தர அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு அபிஷேகத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, உற்சவமூர்த்திகளுக்கு நிவேதனம் சமர்ப்பித்து அவர்களுக்கு அலங்காரம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சகஸ்ரதீபாலங்கார மண்டபத்தில் 1008 விளக்குகளுக்கு இடையில் மலையப்ப சுவாமி ஊஞ்சல் சேவை கண்டருளினார்.
 அதன்பின் இரவு 8 மணிக்கு சர்வபூபால வாகனச் சேவை நடைபெற்றது. தங்கத்தால் ஆன சிறிய தேர் போன்ற அமைப்பைக் கொண்ட சர்வ பூபால வாகனத்தில் தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
 வாகனச் சேவைகளைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டனர். வாகனச் சேவைகளின்போது கல்பவிருட்ச வாகனம் மற்றும் சர்வபூபால வாகனம் ஆகியவற்றின் படங்கள் அச்சிடப்பட்ட அஞ்சல் உறைகளை அதிகாரிகள் வெளியிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com