துயரம் தீர்க்கும் துர்க்கை வழிபாடு! 

நவராத்திரி பெண்களுக்கான முக்கியமான பண்டிகையாகும். நவராத்திரி தினங்களில்...
துயரம் தீர்க்கும் துர்க்கை வழிபாடு! 

நவராத்திரி பெண்களுக்கான முக்கியமான பண்டிகையாகும். நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையைப் பூஜித்து வழிபட வேண்டும். 

ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் இருந்தல் அவசியமாகும். கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே, வீரம் தரும் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாட்களும், செல்வம் தரும் லட்சுமி தேவியை அடுத்த மூன்று தினங்களும், கல்வி தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாகப் பூஜை செய்து வழிபட்டால் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் தங்குதடையின்றி நடைபெறும். 

ஆக்கல், காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபட்டால் தடை, தாமதங்கள் அகலும். தனவரவும் கூடும். வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். அந்த அடிப்படையில் உருவானது தான் நவராத்தி விழா. 

புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவின் எட்டாவது நாள் அஷ்டமி திதி, மகா அஷ்டமி, துர்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மறுநாள் வரும் நவமி திதி மகா நவமியாகப் போற்றப்படுகிறது. அடுத்த நாள் வரும் தசமி திதியை விஜய தசமியாக வழிபடுகிறோம். 

நாடு முழுவதும் இன்று துர்காஷ்டமி விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அஷ்டமம் என்றால் எட்டு என்று அர்த்தம். நவராத்திரியின் எட்டாம் நாள் இன்று எனவே, அன்னை துர்க்கையை இன்று வழிபடுகிறோம். வால்மீகி ராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி அதாவது விஜய தசமி அன்று ஸ்ரீராமர், ராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்றைய தினத்தில் போருக்குப் புறப்பட்டுச் சென்றாராம்! இன்று நம் துயரங்கள் விலகத் துர்க்கையை வழிபடுவது அவசியமாகும். இந்நாளில் துர்க்கைக்கு உகந்த செம்பருத்தி, செவ்வரளி மாலை சூட்டி, சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து விரதம் இருந்து வழிபட்டு வருவது நல்லது. 

நாளை நவமி திதி. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடுகிறோம். எழுத்து வடிவமாக இருப்பவள் சரஸ்வதி. எனவே, அன்றைய தினம் எழுத்து வடிவங்களாக இருக்கும் அனைத்துப் பொருட்களையும் (அதாவது புத்தகம், பத்திரிகை, சாமி புத்தகம்) என அனைத்திற்கு நாம் மதிப்பளித்துப் பூஜிக்க வேண்டிய நாள். எவரொருவர் வாழ்வில் சரஸ்வதி யோகம் இருக்கின்றதோ, அவர்கள் வாழ்வில் சகல கலைகளையும் கற்று தேர்ந்து இருப்பர் என்பது நிதர்னம். சரஸ்வதி தேவியே மனதார நினைத்துப் படிக்கும் குழந்தைகள் தான் படிக்கும் புத்தகங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு சிரர்த்தையுடன் வழிபட வேண்டும். 

அடுத்த நாள் தசமி திதியை நாம் விஜய தசமியாக கொண்டாடுகின்றோம். விஜய என்றால் ஜெயம், வெற்றி என்று பொருள். எனவே, புதிய கலைகள் அனைத்தும் அன்றைய தினம் தொடங்குகின்றார்கள். அன்னை, மகிஷனை வதம் செய்ததும் இந்நன்னாளே. புதிய கல்வியை இந்நாளில் துவக்கினால் மேன்மேலும் வளரும் என்கிறது சாஸ்திரம். விஜயதசமியில் தொடங்கும் அனைத்துக் காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com