காளஹஸ்தி: மகாகௌரி அலங்காரத்தில் ஞானபிரசுனாம்பிகை

காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 8-ஆம் நாளான புதன்கிழமை இரவு
காளஹஸ்தியில் மகாகௌரி அலங்காரத்தில் ஞானபிரசுனாம்பிகை அம்மன். 
காளஹஸ்தியில் மகாகௌரி அலங்காரத்தில் ஞானபிரசுனாம்பிகை அம்மன். 


காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 8-ஆம் நாளான புதன்கிழமை இரவு மகர்நவமி விழாவையொட்டி, மகாகௌரி அலங்காரத்தில் ஞானபிரசுனாம்பிகை அம்மன் காட்சியளித்தார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கடந்த 8 நாள்களாக நவராத்திரி விழா விமரிûயாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஞானபிரசுனாம்பிகை அம்மன் சந்நிதி எதிரில் கொலு அமைத்து, அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. தினந்தோறும் காலையும், மாலையும் ஞானபிரசுனாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை, அபிஷேகங்கள், நிவேதனங்களை கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது.
நிகழ்ச்சியின் 8-ஆம் நாளான புதன்கிழமை மாலை மகர்நவமியையொட்டி, ஞானபிரசுனாம்பிகை அம்மன் மகாகௌரி அலங்காரத்தில் காட்சியளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com