கங்கை நதியைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய போலீஸ்!

கங்கை நதியை அசுத்தம் செய்வோர் மற்றும் ஆக்கிரமிப்போரைக் கைது செய்யும் அதிகாரம் உடைய..
கங்கை நதியைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய போலீஸ்!

கங்கை நதியை அசுத்தம் செய்வோர் மற்றும் ஆக்கிரமிப்போரைக் கைது செய்யும் அதிகாரம் உடைய ஆயுதம் ஏந்திய போலீஸ் படையை அமைக்க வேண்டும் என கங்கை பாதுகாப்பு தொடர்பான வரைவு மதோசாவில் கூறப்பட்டுள்ளது. 

புனிதமான நதியாகக் கருதப்படும் கங்கையைத் தூய்மைப்படுத்த தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, கங்கையை பாதுகாப்பது  தொடர்பாகத் தனி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

இதுகுறித்து கங்கை பாதுபாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: 

கங்கையின் பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதி செய்வதற்கான வரைவு சட்டம் உருவாக்க அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிரிதர் மாள்வியா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு 2016 வரைவு சட்டத்தை தாக்கல் செய்தது. இதுகுறித்து 4 பேர் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்து வரைவு மசோதாவை இறுதி செய்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்படி அனைத்து அமைச்சகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரைவு மசோதாவின் படி மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் ஆயுதம் ஏந்திய கங்கை பாதுகாப்புப்படை அமைக்கப்படும். கங்கை நதியை மாசு ஏற்படுத்துவோரைக் கைது செய்யவும், முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com