முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத்தரும் அமாவாசை வழிபாடு!

நம் ஊரில் உள்ள கோயில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள்..
முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத்தரும் அமாவாசை வழிபாடு!

நம் ஊரில் உள்ள கோயில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை விட அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்றைய தினம் சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன. 

அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயா போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

சில சடங்குகளுக்கும், சில வழிமுறைகளுக்கும் அமாவாசை அன்று சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவரும் அறிந்ததே. பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நம்மை வாழ்த்துவார்கள் என்பது நம்பிக்கை.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். இதுவரை, பிதுர் காரியங்கள் செய்ய முடியாதவர்கள் இனியாவது இதைப் பின்பற்றுவோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com