திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்காக, அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை - அரக்கோணம் இடையே....
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்காக, அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை - அரக்கோணம் இடையே செப்டம்பர் 11(இன்று) முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை 10 நாள்களுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அரக்கோணம் -ரேணிகுண்டா:

இன்று முதல் அரக்கோணத்தில் இருந்து செப்டம்பர் 20-ம் தேதி வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டாவை அடையும். இந்த ரயில் திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

ரேணிகுண்டா -சென்னை:

ரேணிகுண்டாவில் இருந்து செப்டம்பர் 20-ம் தேதி வரை தினமும் மாலை 5.10 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். இந்த ரயில் புத்தூர், ஏகாம்பரகுப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை-அரக்கோணம்:

சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை தினமும் இரவு 9.40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் புறப்பட்டு இரவு 11 மணிக்கு அரக்கோணத்தை அடையும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com