பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் வலம் வரும் மலையப்ப சுவாமி. 
பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் வலம் வரும் மலையப்ப சுவாமி. 

பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாளில்...சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வலம்

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி


திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வந்தார்.
திருமலையில் கடந்த வியாழக்கிழமை மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.
பிரம்மோற்சவ நாள்களில் காலையும், இரவும் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் பலவிதமான வாகனங்களில், பலவித அவதாரங்களில் மாடவீதியில் வலம் வந்து அங்கு கூடியிருக்கும் பக்தர்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம். 
அதன்படி 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். அவர் வலம் வந்த அழகைக் கண்டு அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் பக்தியுடன் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.
சின்ன சேஷ வாகனம்: மகாவிஷ்ணுவிற்கு அனைத்துமாக விளங்குபவர் ஆதிசேஷன். அவர் நடந்தால் அவருக்கு பாதுகைகளாவும், அமர்ந்தால் ஆசனமாகவும், சென்றால் திருக்குடையாகவும், படுத்தால் பாம்பணையாகவும், அணிந்தால் சேஷ வஸ்திரம் மற்றும் ஆபரணங்களாகவும் மாறி அவருக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர். 
அதனால் பிரம்மோற்சவத்தின் தொடக்கத்தில் அவருக்கு முதன்மை அளிக்கப்படுகிறது. முதல் நாள் இரவு அனந்தனாக பெரிய சேஷ வாகனத்தில் சேவை புரியும் ஆதிசேஷன் இரண்டாம் நாள் காலை வாசுகியாக மாறி சின்ன சேஷ வாகனத்தில் பெருமாளைத் தன் மீது சுமந்து மாடவீதியில் புறப்பாடு செய்கிறார். 
மேலும் மனித உடலில் மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை 7 சக்கரங்கள் உள்ளன. அவற்றை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் என்கின்றனர். 
மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை பிரம்மமுடி எனப்படும் முதுகுத்தண்டில் குண்டலினி சக்தி சூட்சும நாடி, சர்ப்ப (பாம்பு) வடிவில் உள்ளது. 
உலகின் பந்தங்களில் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இந்த குண்டலினி சக்தியில் தலை மூலாதாரத்திலும், வால் சகஸ்ராரத்திலும் இருக்கும். 
இவ்வாறு இருக்கும்போது மனிதர்கள் இறைநிலையை தங்கள் மனதால் உணர்வது கடினம். ஆனால் சின்ன சேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வரும் மலையப்ப சுவாமியைக் கண்டு மனிதர்கள் வழிபட்டால் அவர்களிடம் இறைநிலை மேலோங்கும். அந்த இறைநிலை தலைகீழாக அவர்கள் உடலில் சென்று கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை மேல்நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும். 
மனிதர்கள் எப்போதும் இறை சிந்தனையுடன் இருக்கும்போது குண்டலினி சக்தி சகஸ்ராரத்தை நோக்கிச் செல்லும். இதனால் மனிதர்கள் இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என புராணங்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com