மகாராஷ்டிராவில் ஒரே இடத்தில் நடத்தப்பட்ட இந்து - முஸ்லீம் பண்டிகை!

மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு..
மகாராஷ்டிராவில் ஒரே இடத்தில் நடத்தப்பட்ட இந்து - முஸ்லீம் பண்டிகை!

மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் விநாயகர் சிலையும் மொஹரம் பண்டிகைக்கான வழிபாட்டுப் பொருட்களும் ஒரே இடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டன. 

யாவத்மால் மாவட்டத்தில் விதுல் என்னும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் சகோதர்களாக பழகி வருகின்றனர். கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. முஸ்லீம் பண்டிகையான மொஹரம் பண்டிகை 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இரு பண்டிகைகளும் ஒரே இடத்தில் நடத்தக் கிராம மக்கள் முடிவு செய்தனர். 

அதன்படி, மாவட்ட தலைமை காவலர் மேகநாதன் ராஜ்குமார் முன்னிலையில் ஏற்பாடுகளைச் செய்தார். கிராமத்தில் உள்ள கோயில் அருகே பந்தல் ஒன்றை அமைத்து விநாயகர் சிலையும், மொஹரம் பண்டிகைக்கான பொருட்களும் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்தக் கிராமத்தில் கடந்த 134 வருடங்களாக விநாயகர் பூஜை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

கோயில் அறக்கட்டளை தலைவர் ஜெயராம் கூறுகையில், 
இந்தாண்டு தற்செயலாக கணபதி பண்டிகையும், மொஹரம் பண்டிகையும் ஒன்றாக வந்துள்ளது. எனவே, இந்த இரு பண்டிகைகளும் ஒன்றாக கொண்டாட முடிவு செய்தோம். இந்து, முஸ்லீம் மதத்தினர் வழிபாடு செய்ய தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு பெரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் கொண்டாடியதாகவும், இது மனநிறைவை அளிப்பதோடு, மத நல்லிணக்கத்துக்குச் சிறந்து எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com