விருகம்பாக்கம், நடேச நகர் கோயிலில் சாகம்பரி அலங்கார வழிபாடு

சென்னை மாநகரில் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள நடேச நகரில் அமைந்துள்ள..
விருகம்பாக்கம், நடேச நகர் கோயிலில் சாகம்பரி அலங்கார வழிபாடு

சென்னை மாநகரில் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள நடேச நகரில் அமைந்துள்ள சிவ-விஷ்ணு ஆலயம் இப்பகுதி மக்களால் சிறப்பாகப் போற்றப்பட்டு வருகிறது. இக்கோயிலில் விநாயகர், முருகன், தர்மசவர்த்தினி சமேத ராமலிங்கேசுவரர், ராமர்-ஹயக்கிரீவர், தன்வந்தரி சந்நிதிகள் அமைந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில் வாயிலில் மூன்று நிலை கோபுரம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி நாள் மிகவும் சிறப்பானது. இந்நாளில் உமா மகேசுவர விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் தர்மசவர்த்தினி - ராமலிங்கேசுவரருக்கும் காய்கறி - பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை "நிறைபணி - நிறைகனிவிழா" என அழைப்பார்கள். 

ஆடி மாதம் விதை விதைத்து விளைச்சலில் கிடைத்த காய்கறி - பழங்களை, இறைவன் - இறைவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பௌர்ணமி நாளில் படைத்து வழிபடுவார்கள். இவ்வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

24.09.2018 அன்று நடேச நகர் சிவவிஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற சாகம்பரி அலங்காரத்தைப் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தரிசித்து வழிபாடு செய்தனர். 

ஆலய தொடர்புக்கு - 9840094246 / 9445671834

தகவல் - கி. ஸ்ரீதரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com