சிதம்பரம் சிவன்பேட்டை சிவன்கோயிலின் நிலை!

சிதம்பரம் – பரங்கிபேட்டை சாலை ஊருக்குள் நுழையும் முன்னர் புதுசத்திரம் சாலை
சிதம்பரம் சிவன்பேட்டை சிவன்கோயிலின் நிலை!

சிதம்பரம் – பரங்கிபேட்டை சாலை ஊருக்குள் நுழையும் முன்னர் புதுசத்திரம் சாலை பிரிகிறது இதில் சற்று மேற்கு நோக்கி ஒரு சிறு தார்ச் சாலையில் பரங்கிபேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 


 
இந்தத் தார் சாலையில் சிறிது தூரம் சென்றால் பெரிய கடலை கொல்லையில் நடுவில் கிழக்கு நோக்கிய கோயில் ஒன்றுள்ளது. அது தான் நாம் காண இருக்கும் சிவன்பேட்டை கோயில்.
 


இறைவன் இறைவி இருவரின் கருவறை தவிர பிற முகப்பு மண்டபங்கள் இடிந்து வானம் பார்க்கின்றன. முக்கண்ணனின் மூன்று கண்களாக மூன்று பனைமரங்கள் கோயிலை ஒட்டி நிற்கின்றன. கருவறை துவாரபாலகனாய் ஓர் உயர்ந்த அத்திமரம் கோயிலை தன் வேர்களால் கட்டி காக்கிறது 


இறைவன் உத்திராபதீஸ்வரர் சதுர பீடத்தில் சற்று நடுத்தர அளவிலான லிங்க மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அருகில் ஒரு மாடத்தில் பைரவர் சற்று சிதிலமடைந்தவாறு உள்ளதை காண்கிறோம், கருவறையில் அம்பிகை இல்லை, விநாயகர் இல்லை, சண்டேசர் இல்லை நேர் எதிரில் நந்தி மட்டும் யாரோ ஒரு பக்தர் கொடுத்த நிழலில் இறைவனை நோக்கியபடி அமர்ந்திருக்கின்றார்.


 
எத்தனையோ இடர்பாடுகளை கடந்தும் இறைவன் இன்னும் இங்கு வீற்றிருக்கிறார் என்றால் அவர் ஒருவரின் கரங்களால் திருப்பணி பெற காத்திருக்கிறார் என்றுதான் பொருள் 
 
அந்த ஒருவர் யாரோ?

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com