காவிரி திட்டம்-2 காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு - முழு விவரம்

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு எவ்வாறு அமைய உள்ளது என பார்ப்போம்,
காவிரி திட்டம்-2 காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு - முழு விவரம்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (CONTEMPT PETITON (CIVIL) NO. 898 OF 2018 IN CIVIL APPEAL NO. 2453 OF 2007) அதில் காவிரி வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மாற்றி அமைத்த திட்டத்தைப் பார்ப்போம். மேற்படி வரைவு அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கப்பட்டு, வரவிருக்கும் பருவமழை துவங்குவதற்கு முன்னதாக, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இரண்டாவதாக காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு எவ்வாறு அமைய உள்ளது என பார்ப்போம்,

II காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு (Cauvery water Regulation Committee)

1. காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் அமைப்பு (Composition of the Cauvery Water Regulation Committee)

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவானது கீழ்க்கண்ட அமைப்புடன் இருக்க வேண்டும்:

1) முழு நேர உறுப்பினர் (நீர் ஆதாரங்கள்)

குழு தலைவர்

2) கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் உள்பட ஒவ்வொன்றுக்கும் தலைமை பொறியாளர் பதவிக்கு கீழே இல்லாத ஒரு  பிரதிநிதி

 

உறுப்பினர்

3) இணை செயலாலர் பதவிக்கு இணையான  இந்திய வானிலை ஆய்வுத்துறை ஒரு பிரதிநிதி

உறுப்பினர்

4) மத்திய நீர் ஆணையத்தில் ஆற்றுநீர் அளவீடுகளை கையாளும் தலைமை பொறியாளர் பதவிக்கு கீழ் இல்லாத ஒரு பிரதிநிதி

உறுப்பினர்

5) மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சரகத்தின் ஆணையருக்கு கீழல்லாத  ஒரு பிரதிநிதி

 

உறுப்பினர்

6) குழுவின் செயலர்

உறுப்பினர் செயலர்

காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கும்.

2. காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் பணிகள்(Functions of the Cauvery Water Regulation Committee)

தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மாற்றியமைத்த 16.02.2018 தேதியிட்ட உச்சநீதிமன்ற உத்தரவின் படி, வரிசையில் உள்ள விதிகளை அமல்படுத்துவதை ஒழுங்குமுறைக் குழு உறுதிப்படுத்த வேண்டும்;-

a) ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகரா, கபினி, மேட்டூர், பவானிசாகர், அமராவதி மற்றும் பானசூரசாகர் ஆகிய நீர்த்தேக்கங்கள்,  ஒவ்வொரு நீர்த்தேக்கத்திலும் தினசரி நீர் மட்டம், நீர்வரத்து மற்றும் சேமிப்பு நிலைகளை சேகரிக்க வேண்டும்

b) ஆணையத்தால் உத்தரவிபட்டபடி நீர்த்தேக்கங்களில் இருந்து மாதாந்திர அடிப்படையில் தினசரி தண்ணீர் பத்து வெளியீடுகளை உறுதி செய்ய வேண்டும்.

c) மேற்கூரிய நீர்த்தேக்கங்களிடமிருந்து 12 மணி நேர அடிப்படையில் நீர் வெளியேற்றத் தரவை சேகரிக்க வேண்டும்.

d) ஒவ்வொரு குழுவில் உள்ள ஆணையத்தின் பிரதிநிதிகள் ஒழுங்குமுறைக் குழுவால் வழங்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணைகளை சரியாக செயல்படுத்துவதை கண்காணிக்க வேண்டும்;

எந்த மாறுபாடு ஏற்பட்டாலும், பிரதிநிதி உடனடியாக மேல்நடவடிக்கைக்காக செயற்குழுவின் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.

e) தற்போது அறியப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான தொடர்பு புள்ளியான பில்லிகுண்டுலுவில் அள்வீட்டுகருவி மற்றும் வெளியேற்றும் தளம் மூலம் தினசரி கடந்து செல்லும் நீர் அளவை சேகரிக்கவும் மற்றும் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

f) ஒவ்வொரு நீர்த்தேக்கத்திற்கான மாதாந்திர நீர்வழங்கல் கணக்கை தொகுக்க மற்றும் ஒத்திசைக்க வேண்டும்.

g) பருவமழை நிலைமையை மதிப்பிடுவதற்கும் மழைக்காலத்தின் நிலையைப் பற்றி ஆணையத்திற்கு தெரிவிப்பதற்கும் இந்திய வானிலைத் துறையின் முக்கிய மழைப்பொழிவு நிலையங்களைப் பற்றிய வாராந்திரத் தகவலை சேகரித்து தொகுக்க வேண்டும்.

h) பிரதான திட்டங்களின் பொறுப்பிலுள்ள மாநில பிரதிநிதிகள், ஒழுங்குமுறைக் குழுவிற்கு மழைப்பொழிவு குறித்த வழக்கமான தகவல்களுடன், வெளியீடுகளில் எந்த மாற்றமும் தேவைப்படுமா என்பது பற்றியும் அறிவிக்க வேண்டும்.

i) தண்ணீர் கணக்கின் பருவகால மற்றும் வருடாந்திர அறிக்கையை தயாரிப்பது மற்றும் கீழே குறிப்பிட்டுள்ளபடி ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்:-

  • தெற்கு-மேற்கு பருவ மழை - 1 ஜூன் முதல் 15 அக்டோபர் வரை

              (அக்டோபர் பதினைந்து நாட்களும் சேர்த்து)

  • வடகிழக்கு பருவகாலம் - அக்டோபர் 16 முதல் 31 ஜனவரி வரை
  • வெப்ப பருவநிலை - பிப்ரவரி 1 முதல் மே 1 வரை

3. ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டங்கள்(Meetings of the Regulation Committee)

1) ஒழுங்குமுறைக் குழு, ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மழைக்காலங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறை சந்திக்க வேண்டும்; மழைக்காலம் தொடங்கியவுடன், கூட்டம் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு முறை நடைபெறும், ஆனால் கூட்டங்களை தேவைப்படும் பொழுது கூட்ட அதிகாரம் உள்ளது. எந்தவொரு அவசர சூழ்நிலையிலும், கூட்டம் நடத்துவதற்கு குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன் அறிவிப்பு வழங்கப்படும்.

2) ஒருவேளை, பாதிக்கப்படக்கூடிய மாநிலமானது, கூட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லையெனில், பின்னர் மற்றொரு கூட்டத்தை அழைப்பதற்கான வாய்ப்பு, குழுவினால் பரிசீலனை செய்யப்படும்.

                ஒரு முடிவை எடுக்க தாமதிப்பது சாத்தியமில்லை என்று நிலைமை இருந்தால், பாதிக்கப்பட்ட மாநிலத்திலிருந்து பிரதிநிதி இல்லாதபோதும், அந்தக் குழுவும் பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யலாம்.

3) ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்திற்கான குறைநிறைவெண் ஆறு உறுப்பினர்களாக இருக்கும்.

4) குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருப்பர்; தலைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு.

ஒப்பம்/-

U.P. சிங்

செயலாளர்

நீர்வள ஆதாரம் நதி அபிவிருத்தி & கங்கா புத்துயிர், அமைச்சகம்

இந்திய அரசு

புது தில்லி -110001.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com