காட்டுப்பகுதியில் போய் வேட்டையாடுவதுதான் என்னோட பேவரிட் ஹாபி - விஜயகாந்த் 

காட்டுப் பகுதியில் வேட்டையாடுவேன் - விஜயகாந்த்
காட்டுப்பகுதியில் போய் வேட்டையாடுவதுதான் என்னோட பேவரிட் ஹாபி - விஜயகாந்த் 

காட்டுப்பகுதியில் போய் வேட்டையாடுவதுதான் என்னோட பேவரிட் ஹாபி.  மதுரை சுத்து வட்டாரத்தில் 40 கி.மீக்குள் பைக்கில் நண்பர்கள் கூட சேர்ந்து வேட்டைக்கு கிளம்புவோம்.  சோளம் ,மரவள்ளிக்கிழங்கு தோட்டங்களிலே காட்டுப் பன்னிங்க நடமாட்டம் அதிகமாகஇருக்கும். ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை இன நாய்களுக்கு ஆக்ரோஷம் ஜாஸ்தி.அந்த மாதி நாய்ங்கள நல்லா ட்ரைனிங் குடுத்து காட்டுப் பன்னிங்க மேல ஏவி விட்டதும் அதுங்க போயி காட்டுப் பன்னிங்க காதைக் கவ்விடும்.  

அருப்புக்கோட்டை பக்கத்திலே முயல் வேட்டை ஆடுவோம். நாட்டு முயல்னா விட்டுடுவோம். காலை, புல் மேல இருக்குற பனித்துளியோட கூடிய தளிர் இலைகளை சாப்பிட காட்டு முயல்கள் வரும். தாரை தப்பட்டை கொண்டு போய் பலமா அடிக்க ஆரம்பிச்சதும், அதுங்க மிரண்டு ஓட ஆரம்பிக்கும். அப்போ நாய்களை ஏவுவோம்.நாய்கள் எத்தனை முயல்களை பிடிக்குதோ, அதுல பாதி அளவைக் கறி பண்ணுனதும், நாய்களுக்கு போட்டுடறதுதான் ஐதீகம். அதுல மீதி பாதியைத்தான் சாப்பிடுவோம். முயல் ரத்தத்தை வீட்டுப்பெண்கள் கூந்தல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவங்க.

சின்ன வயசில நண்பர்கள் கூட போய் வேட்டையாட கத்துக்கிட்டேன். நைட் டைம் வேட்டையாடறப்போ தலையில 'ஹெடலைட்' கட்டிக்கிட்டு போவோம். அந்த வெளிச்சக் கூச்சத்துல மிருகங்கள் ஸ்தம்பிக்கறப்போ 'ஷூட்' பண்ணிடுவோம். கையில் ரைபிள்  வச்சிருந்தாலும்  அவசியம் ஏற்பட்டால் ஒழிய அதை உபயோகிக்க மாட்டோம்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.01.1983 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com