'நானும் பொம்பளைதானேயா, என்ன இருக்குன்னு அப்படி பார்க்குறீங்க?' - 'சில்க்' ஸ்மிதா

வீட்டில் செட்டில் ஸ்மிதா
'நானும் பொம்பளைதானேயா, என்ன இருக்குன்னு அப்படி பார்க்குறீங்க?' - 'சில்க்' ஸ்மிதா

லைப் எப்படியிருக்கு ஸ்மிதா?

"பரவாயில்லை.ரொம்ப சந்தோஷமாயும் திருப்தியாவும் இருக்கேன்னு சொல்ல முடியாது. வசதியான பங்களா, கார், பணம் ..எல்லாத்துக்கும் மேல ஓஹோன்னு புகழ். இத்தனையும் இருந்தாலும் மனசுக்குள்ள ஓரமா வெறுமை தட்டி போச்சி. காலை ஏழு மணிக்கு போயிட்டு நைட்டு ரெண்டு மணிக்கு திரும்புற வாழ்க்கையில கொஞ்சம் பிடிப்பு கழண்டு போச்சு. எத்தனை நாளைக்கு இதுன்னு தோணுது. எது முடிவுன்னு கேள்வி வருது. இத்தனை வசதிகளிருந்தும் இதை உக்காந்து அனுபவிக்க நேரம் இல்லையேன்னு வருத்தம் வருது. இந்த வாழ்க்கைக்காக ஒரு சமயத்தில ஏக்கம இருந்தது. இபப நேர்மாறான நிலை இருக்குது. பிறக்கும் பொழுது இதையெல்லாம் கட்டிக்கிட்டா பிறந்தோம்?

வண்டிச் சக்கரம் ரிலீசானப்ப இதே மாதிரி கூட்டமும் ஆரவாரமும் நமக்கு கிடைக்காதான்னு நினைச்சதுண்டு. இப்ப கொஞ்சம் கூட்டம் நின்னு வெறிச்சு பாத்தா, 'நானும் பொம்பளைதானேயா, என்ன இருக்குன்னு அப்படி பார்க்குறீங்கன்னு சொல்லத் தோணுது.  இந்த வெற்றிக்கும் புகழுக்கும் நான் மட்டுமே கரணம்..என் உழைப்பு மட்டுமே காரணம். என் உழைப்பு ஒண்ணுதான் காரணம்,.! 

எத்தனை நாளைக்கு இப்படி டே அண்ட் நைட் கன்டினியூஸா ஒர்க் பண்ண முடியும்? நான் என்ன மிஷீனா? விசயத் தட்டினா பறக்கிற எந்திரமா? எனக்கும் சலிப்பு வருது!கோபமும் எரிச்சலும் வருது!

இது சிலுக்கோட நேரம். அப்படி என்கிட்ட என்ன இருக்குன்னு  நானே கேட்டுப்பேன். சிலபேர் சிலுக்கோட கவர்ச்சி  கண்ணும்பாங்க..சிலர் உதடும்பாங்க எது எப்படியோ, ஆடிக்கிட்ருக்கேன். வர்ற படங்களையெல்லாம் ஒத்துகிட்டு பணம் பண்ணிடணும்கிறதுக்காக இல்ல. பணத்தை சாப்பிடமுடியுமா? இப்ப என்னால அது முடியுது..உடம்புல வலு இருக்கு..!முடியலங்கிற போது நிறுத்திடுவேன்.

சந்திப்பு: உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.04.1983 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com