பாடல் ஹிட்டாவது என்பது இசையமைப்பாளரின் திறமையை பொறுத்தது!

ஆடி  மாதத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் அன்னையின் திருநாமமே ஒலிக்கும். அந்த கற்பூரநாயகியை அற்புதமான குரலில் பாடி, கேட்போர் செவி மனமெல்லாம் உருகச் செய்பவர் எல்.ஆர்.ஈஸ்வரி.
பாடல் ஹிட்டாவது என்பது இசையமைப்பாளரின் திறமையை பொறுத்தது!

ஆடி  மாதத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் அன்னையின் திருநாமமே ஒலிக்கும். அந்த கற்பூரநாயகியை, கனகவல்லியை, காவி மகமாயியை அற்புதமான குரலில் பாடி, கேட்போர் செவி மனமெல்லாம் உருகச் செய்பவர் எல்.ஆர்.ஈஸ்வரி.   ஈஸ்வரியின் திருநாமத்தை பாடி வரும் இந்த ராஜேஸ்வரி கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்.

இவர் ஒரு சிறந்த சங்கீத பரம்பரையின் வாரிசு. இவரது தாயார் நிர்மலா ஒரு சிறந்த பாடகியாகத் திகழ்ந்தவர். இவரது தாயார் தேவராஜு தன்னுடைய இரண்டு பெண்களையும் (ஈஸ்வரி - அஞ்சலி) ராஜம் அய்யர் என்ற இசைக்கலைஞரிடம் இசை பயிலச் செய்தார். பின்னர் திருச்செந்தூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பரதம் பயிலச் செய்தார். அவர்களில்  ஈஸ்வரியை சந்தித்த பொழுது:

கே: உங்களுக்கு முதன் முதலில்  பாட  வாய்ப்பளித்த இசை அமைப்பாளர் யார்?

ஈஸ்வரி: இசை மேதை எஸ்.வி.வெங்கட்ராமன். 'மனோகரா' படத்தில் சகோதரி ஜிக்கியிடன் சேர்ந்து 'இன்ப நாளிதே'  என்ற பாடலைப் பாடினேன்.

கே: இதுவரை எத்தனை மொழிகளில் பாடியிருக்கிறீர்கள்?

ஈஸ்வரி: 14 மொழிகளில்  பாடியிருக்கிறேன்.  அதில் ஒரு சிறப்பு உண்டு. விஜய பாஸ்கர் இசையமைப்பில் 'நன்னா கண்ட எல்லி' என்ற படத்தில் 14 மொழிகளில் அமைந்த ஒரே பாடலை நான்  பாடியிருக்கிறேன்.

கே: பெரும்பாலும் கிளப் டான்ஸ் பாடல்களாகவே பாடி இருக்கிறீர்கள். ஏன்?

ஈஸ்வரி: எத்தகைய பாடல்களை நான் பாடினால் சோபிக்கும் என்பதை முடிவு செய்பவர் இசையமைப்பாளர்தானே?

கே: ஒரு பாடல் ஹிட்டாவதற்கு அதிக இசைக்கருவிகள் தேவையா?

ஈஸ்வரி: அபப்டி சொல்ல முடியாது. 10 வாத்தியங்களுடன் நான் பாடிய 'எலந்தப் பயம்' பாட்டும், 100 வாத்தியங்களுடன் 'சிவந்த மண் ' படத்திற்காக பாடிய 'பட்டத்து ராணி' பாடலும் ஹிட்டாகவில்லையா? பாடல் ஹிட்டாவது என்பது இசையமைப்பாளரின் திறமையை பொறுத்தது.

கே: அன்றி நீங்கள் பாடிய பாடல்கள் மனதில் நிற்பது போல, இன்றைய பாடல்கள் மனதில் நிற்பதில்லையே ஏன்?

ஈஸ்வரி: முன்பு ஒரு பாடலை ஏற்க மனம் இருந்தது. இடைவெளி விட்டுத்தான் படங்கள்; வரும். ஆனால் இன்று நாளுக்கு இரண்டு படம் திரையிடப்படுவதால் பாடலை மனதில் கொள்ள வாய்ப்பில்லை என்பது என் அபிப்ராயம்.

கே: உங்களுக்கு புகழ் தந்த பாடல் எது?

ஈஸ்வரி: எம்.எஸ்.வி அவர்கள் இசையில் பாடிய  "வாராயோ தோழி வாராயோ" பாடல்தான்.

பத்மநாபன்

(சினிமா எக்ஸ்பிரஸ்  15.06.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com