உங்களுக்கு எப்போது அதிகமாக கோபம் வரும்?

ரஜினிகாந்த் பதில்கள் 
உங்களுக்கு எப்போது அதிகமாக கோபம் வரும்?

15.07.81

எஸ்.பழனிவேல், உல்லி  வீதி, விஜயநகரம் (ஆந்திரா)

எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் உங்களை அடைய முடியாததன் ரகசியம் என்ன?

நான் யாரையும் யாருடைய பாணியையும் காப்பி அடிப்பதில்லை.

&&&&&

வி.விமலா, பெங்களூர்

ஆர்ட் படங்களை பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

மக்கள் ரசிக்கும் படங்களே ஆர்ட் படங்களாக இருக்க முடியும்

&&&&&

01.08.81

எஸ்.சின்னதுரை , சீலியம்பட்டி, ஆத்தூர் (சேலம்)

உங்களுக்கு எப்போது அதிகமாக கோபம் வரும்?

தப்பு செய்து விட்டு, அதை சிலர் நியாயப்படுத்த முயலும் போது .

&&&&&&

எம்.கோபால். சென்னை-4.

நீங்கள் எந்த நேரத்தில் சந்தோசமாக இருப்பீர்கள்?

கள்ளம் கபடமில்லாத குழந்தைகளுடன் கொஞ்சிப்பேசும் பொழுது

&&&&&

வி.ரங்கசாமி. மதுரை

நீங்கள் படபபடிப்பில் கதாநாயகியை கட்டிபிடித்து நடிக்கும் பொழுது உங்கள் மனைவி பார்க்கும் பொழுது என்ன  நினைப்பார்?

என்னை ஒரு மாதிரி. கட்டிப்பிடிக்கிறார். அவளையொரு மாதிரி கட்டிப்பிடிக்கிறாரே என்று நினைக்கலாம்.

&&&&&&

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com