'என்னங்க இவர் பெரிய நடிகர்? அமிதாப் மாதிரி ஆகுமா? 

பம்பாய் பங்கிரா தியேட்டரில் நான் நடித்த 'ஏக் துஜே கேலியே' படத்தை நானே  பார்த்தது வேடிக்கையான அனுபவம்! மாறுவேஷம் போட்டுக் கொண்டு கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கினேன்
'என்னங்க இவர் பெரிய நடிகர்? அமிதாப் மாதிரி ஆகுமா? 

பம்பாய் பங்கிரா தியேட்டரில் நான் நடித்த 'ஏக் துஜே கேலியே' படத்தை நானே பார்த்தது வேடிக்கையான அனுபவம்! மாறுவேஷம் போட்டுக் கொண்டு கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கினேன். சீட்டில் அமர்ந்தும் பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று கவனித்தேன். ஒரு பம்பாய்க்காரர். படத்தில் நான் தோன்றியதும், 'யாருங்க இந்த ஆள்? புதிய நடிகரா?" என்று தெரியாதது போல கேட்டேன். அந்த பம்பாய்க்காரரிடம் இந்தியில்.       

'கமலஹாசன் பெயர்.மிகவும் நன்றாக நடிக்கிறார்.ஸ்பீடா டாப்புக்கு வந்து கொண்டிருக்கிறார்!' என்றார் அவர் என்னிடம். 

'என்னங்க இவர் பெரிய நடிகர்? அமிதாப் மாதிரி ஆகுமா? என்று நான் கேட்டதும் அந்த ஆளுக்கு கோபம் வந்து விட்டது. 

சும்மா இரு உனக்கு ஓன்னும் தெரியாது. அமிதாப் பாணி வேறு: இவர் பாணி  வேறு..கொஞ்ச நாளிலே பாரு..இவர்தான் டாப்..! என்றார்.

எந்த ஊர் இவர் ? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் தூக்கி  வாரிப் போட்டது.  
மெட்றாஸ்காரர்! ஆனால் ஒன்னு..இவர் அப்பா பஞ்சாபிக்கார்.. அம்மா மெட்றாஸ்..என்றாரே பார்க்கலாம். 

எனக்குள் சிரித்துக் கொண்டேன். படத்தின் ஒரு கட்டத்தில் என் நடனத்தைக் கண்டு மக்கள் கை தட்டினார்கள்.    அவரும் கை  தட்டினார் .

கையைத் தட்டினேன். 'நாம் கமலஹாசனின் விசிறிகள்!' என்று மெதுவாக என்னிடம் சொன்னார். 

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.01.82 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com