"ஏன்?, நான் என்ன தவறு செய்தேன்?" என்று கேட்டேன்.

கலைஞர்கள் கண்ட மக்கள் திலகம் - எம்.ஜி.ஆர் பற்றி ரஜினிகாந்த்
"ஏன்?, நான் என்ன தவறு செய்தேன்?" என்று கேட்டேன்.

'அலாவுதீனும் அற்புத விளக்கும் ' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எந்தக்  காட்சியாக இருந்தாலும் ஒரு மாறுதல் வேண்டும் என்று கருதி ஏதாவது செய்கின்ற நான், கீழே கிடந்த கத்தியை ஸ்டைலாக காலால் எத்தி மேலே எடுத்தேன்.  

'இந்த சமயத்தில் அண்ணன்  எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் உங்களை ஒங்கி  அடித்திருப்பார். இப்படியெல்லாம் செய்யக் கூடாது" என்று ஸ்டண்ட் மாஸ்டர் கூறினார்.  அதை மற்ற ஸ்டாண்ட் குழுவினரும் ஆமோதித்தனர்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை."ஏன்?, நான் என்ன தவறு செய்தேன்?" என்று கேட்டேன்.

கத்தி ஒரு ஆயுதம். கத்திச் சண்டை செய்வது ஒரு வித்தை. எந்தத் தொழிலையும், வித்தையையும் பக்தியோடு செய்ய வேண்டும். நீங்கள் கத்தியை அலட்சியமாக காலால் ஸ்டைலாக எடுப்பது பார்ப்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் தொழிலையும் வித்தையையும் கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. இதைக்கண்டால் எம்.ஜி.ஆர் சார் கோபப்பட்டிருப்பார்கள்

அதன் பின்புதான் நான் செய்தது தவறு என்பது புரிந்தது.

எம்.ஜி.ஆர் சார் இப்போது சினிமா உலகில் இல்லா விட்டாலும், அவரைப்பற்றி எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.02.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com