'நல்லபடங்கள்', 'மோசமான படங்கள்' என்று இரண்டு விதமாய் தமிழ் சினிமாவை பிரிக்க முடியும்!

'மெட்ராஸ் டு பாம்பே'  - கமல்ஹாசன் தொடர்
'நல்லபடங்கள்', 'மோசமான படங்கள்' என்று இரண்டு விதமாய் தமிழ் சினிமாவை பிரிக்க முடியும்!

பல நட்சத்திரங்களுக்கு அவர்களுடைய படங்களின் சக்ஸஸ் அண்ட் பெயிலியர்களைப் பொறுத்துதான் வலி.என் வலி வேறு விதம். இப்படிச் சொல்வதானால்  மற்றவர்களிடம்  இருந்து என்னை வேறுபடுத்திக்  காட்ட அல்லது என்னை நான் உயர்த்திக்  காட்ட நினைப்பதாய் பொருள் கொண்டு விட வேண்டாம்.

என் அறிவு ஒப்புக்கொள்கிற, என் மனசு ஏற்றுக் கொள்கிற பலவற்றை செய்ய முடியாத கையாலகாத்தனத்திற்கும், எனக்குப் பிடிக்காத   பலவற்றை பிடித்த மாதிரி செய்கிற போலித்தனத்திற்குமிடைப்பட்ட வலி என்னுடையது. 

தமிழ் சினிமா ரொம்ப வேகமாய் முன்னேறி வருகிறது என்பது பலரின் மதிப்பீடு.  அது ஓரளவுக்கு உண்மையேயாயினும், 1960-ஆம் வருஷ  ஹாலிவுட் படங்களின் தரத்தைக் கூட நாம் இன்னும் பிடிக்க  முடியவில்லை என்கிற உண்மை சினிமாவில் சம்பந்தப்பட்டவன் என்ற முறையில், என் மனதை நெருடுகிறது. ஊவா  முள்ளாய் உறுத்துகிறது.

ஆர்ட் பிலிம், எக்ஸ்பெரிமெண்டல் பிலிம் என்று சொல்லப்படுவதையெலாம் மிருதுவாய் ஒதுக்கி விட்டு, சொல்லிக் கொடுக்கப்பட்ட பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் ஜாக்கிரதையாக விலக்கி விட்டு, 'நல்லபடங்கள்', 'மோசமான படங்கள்' என்று இரண்டு விதமாய் தமிழ் சினிமாவை பிரிக்க முடியும்.

இவை பற்றி என் ஆரம்ப காலத்திலிருந்தே பேசி வந்திருக்கிறேன் .பேசிவந்த அதே நேரத்தில், ப்ராக்டிகலாக நான் என்ன செய்து வந்திருக்கிறேன்; என்னால் என்ன செய்ய முடிந்தது என்பது வேறு விஷயம். பல சந்தர்ப்பங்களில் நான் பல விதமாய் காம்ப்ரமைஸ் செய்து கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இது என் 'சர்வைவல்' சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்து வந்தது. இப்போதும் அந்த நிலை நீங்கி விடவில்லை. சர்வைவலின் டிகிரி குறைந்திருக்கிறது.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.02.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com