ரிப்ளக்டர் வெப்பத்துல கூட நடிக்கிறவர் என்னதான் மன்மதனா இருந்தாலும் எங்கேயிருந்து சார் காதல் வரும்?

படப்பிடிப்பில் அம்பிகா
ரிப்ளக்டர் வெப்பத்துல கூட நடிக்கிறவர் என்னதான் மன்மதனா இருந்தாலும் எங்கேயிருந்து சார் காதல் வரும்?

கல்யாணக் களையோடு காட்சியளித்தது அவென்யூ ரோட்டில் உள்ள அம்பிகாவின் வீடு.காரில் ஷூட்டிங் போகும் போதே பேட்டியைத் தொடங்கினோம்.

'காதல் காட்சிகளில்  நடிக்கும்  போது  உள்ளுக்குள் எப்படி பீல் பண்றீங்க ? என்று அம்பிகாவைக்  கேட்டேன்.

'பிகினிங் ஸ்டேஜ்ல குழாயை திறந்து விட்ட மாதிரி குபீர்னு ஒரு பீலிங் பரவும். கண்ணெல்லாம் படபடக்கும். வெக்கமும் பயமும் மாறி மாறி அலைக்கழிக்கும்.போகப் போக இது பழகி விடும். எத்தனையோ கதாநாயகர்களோட டூயட்  பாடி நடிச்சிருக்கேன்.  நான் வெறும் ஜடமா மாறனும். முகத்துல மட்டும்முயற்சிகளைக் தேக்கி காட்டி, அது உடம்புல பரவாம பார்த்துக்கணும். இது ஒரு போராட்டம்தான். அம்பது பேர் முன்னால நின்னு வேடிக்கை பாக்க, ரிப்ளக்டர் வெப்பத்துல கூட நடிக்கிறவர் என்னதான் மன்மதனா இருந்தாலும் எங்கேயிருந்து சார் காதல் வரும்?

ஒரு பரபரப்பான கதாநாயகியா தமிழ்ல என் உங்களால் வர முடியல?

தமிழ்ல 'சக்களத்தி' படத்துல நடிக்க ஒப்பந்தமானேன்.கதாநாயகியா  ஷோபா நடிச்சிருந்தாலும் டைட்டில் ரோலில் நான் நடிச்சது சந்தோஷமாயிருந்தது. படம் சுமாராத்தான் போச்சு. ஒரு நல்ல பிரேக்  தமிழில் கிடைக்கும்னு எதிர்பார்த்ததுல கொஞ்சம் ஏமாற்றம்தான். மறுபடியும் அழைப்புகள்.சுமாரான வாய்ப்புகள். இது தொடர்ந்த போதுதான் .பாக்கியராஜ் கிட்ட இருந்து அழைப்பு. அந்த நாளை என்னால மறக்கவே முடியாது.

சீன்  பை சீன் கதையை அவர் என்கிட்டே விவரிச்சப்போ எந்த அளவுக்கு எனக்கு ஆக்டிங் ஸ்கோப் இருக்கும்னு மனசு கணக்கு போட ஆரம்பிச்சது. நிச்சயமா இந்தப் படம் எனக்கு ஒரு பிரேக்  தரும்னு நம்பினேன். படம் ரிலீசுக்கு அப்புறம் ஒரு செகண்ட் கிரேட் ஆர்ட்டிஸ்ட் மாதிரி என்னைப்  பாத்தவங்க எல்லாம் மரியாதையோட      நிமிர்ந்து பாக்க ஆரம்பிச்சாங்க.  மலையாளத்துல பாப்புலர் ஆட்டிஸ்ட்டா இருந்தாலும், தமிழில் என்னை ரெகக்னைஸ் பண்ணிக்கிற அளவுக்கு காட்டியது 'அந்த ஏழு நாட்கள்' படம்தான். தாங்ஸ் டு ஹிம்.

உங்க தங்கை ராதாவோட வேகத்தை பார்த்து நீங்க பொறாமைப்படுறதா வர்ற செய்திகளைப் பாத்து என்ன நினைக்கிறீங்க?

இதைவிட ஒரு அபத்தமே  இருக்க முடியாது. அவ என்னோட தங்கை சார்.  என் ரத்தம். என்னோட வளர்ச்சியை பார்த்து நானே பொறாமைப்படுறது எப்படி சார் சாத்தியம்? என்னோட இன்னொரு தங்கையும் சினிமாவுக்கு வரனும்னு இப்ப நான் ஆசைப்படுறேன். அந்த காலத்துல லலிதா, பதமினி, ராகினி மாதிரி நாங்க மூணு பேரும்  ஒத்துமையா புகழோட   இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

சந்திப்பு: பிரசன்னா

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.04.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com